2022ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் (03.01.2022) பிரதேச செயலர் கயிலாயபிள்ளை சிவகரன் அவர்களின் தலைமையில்வேலணை பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதத்துடன் ஆரம்பமான நிகழ்வில் தொடர்ந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் சத்தியப்பிரமாண உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் உரையுடன் ஆரம்பமான நிகழ்வில் Covid 19 பாதுகாப்பு தொடர்பான சிறப்புரை வேலணை சுகாதார வைத்திய அதிகாரியினால் நிகழ்த்தப்பட்டது.



