මුද්‍රණය
ප්‍රවර්ගය: News & Events

User Rating: 5 / 5

Star ActiveStar ActiveStar ActiveStar ActiveStar Active
 

வடகீழ் பருவபெயர்ச்சி காலநிலைக்கான முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (25.11.2024) பிரதேச செயலாளர் திரு.க.சிவகரன் தலைமையில் இடம்பெற்றது.

வடகீழ் பருவபெயர்ச்சி காலநிலைக்கான முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (25.11.2024) பிரதேச செயலாளர் திரு.க.சிவகரன் தலைமையில் இடம்பெற்றது. 
தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை மற்றும் தொடர்ந்து வரும் பருவகால மழை காரணமாக ஏற்படும் வெள்ள அபாயம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல், கிராம அலுவலர் பிரிவுகளில் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களில் இடர் தணிப்பு செயற்பாடுகள் தொடர்பாக (பாதுகாப்பு மத்திய நிலையங்கள், தேவைகள், சுகாதாரப் பிரச்சனைகள், குடிநீர் பிரச்சனைகள், கழிவகற்றல் செயற்பாடுகள்) குறித்த திணைக்களங்களுடன் கலந்துரையாடப்பட்டது. இந் நிகழ்வில் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர், கடற்படையினர், சுகாதார வைத்திய அதிகாரி, பிரதேச சபை உத்தியோகத்தர்கள், கடற்தொழில் நீர் வள திணைக்கள உத்தியோகத்தர்கள், பல நோக்கு கூட்டுறவு சங்கம், தொடர்புடைய ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

1

FaLang translation system by Faboba