தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 05.09.2025ஆம் திகதி நடாத்தப்பட்ட மாவட்ட மட்ட கரம் போட்டியில் தனிநபர் பெண்கள் பிரிவில் மண்கும்பான் இளைஞர் கழகத்தைச் சேர்ந்த கே.அக்சயா இரண்டாம் இடத்தினையும் ஆண்கள் பிரிவில் துறையூர் ஐயனார் இளைஞர் கழகத்தைச் சேர்ந்த கே.குருசரண் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர். இவர்களை பயிற்றுவித்த வேலணை மத்திய கல்லூரி ஆசிரியர் A.R.அனோஜன் அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.


