මුද්‍රණය
ප්‍රවර්ගය: News & Events

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 
நேர்மையான அரசசேவைக்கான "நேர்மை கலாசாரம் - கிளீன் சிறீலங்கா" தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்தல்.
இலங்கையின் ஒட்டுமொத்த அரசசேவையினதும் தரம், வினைத்திறன், வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தல், ஊழலற்ற முன்மாதிரியான நிர்வாகக் கட்டமைப்பை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் நடைமுறைப்படுத்தப்படும் கிளீன் சிறீலங்கா தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து அரசசேவையின் நெறிமுறை விழுமியங்களை வலுப்படுத்துவதற்காக தேசிய நேர்மை வாரம் நிகழ்ச்சித்திட்டம் ஜூலை 27- ஜூலை 31 நடைமுறைப்படுத்தப்படுகிறது.
பொதுமக்கள் நலனுக்கு எப்போதும் முன்னுரிமைவழங்கி நெறிமுறை விழுமியங்கள் மற்றும் கொள்கை ரீதியான தரங்களுடன் ஒன்றிணைந்து யாரும் பார்க்காத போதும் எந்தவொரு மேற்பார்வையும் இல்லாதபோதும் தனக்குத்தானே சுய கட்டுப்பாட்டுடன் மேற்கொள்ளும் கனிவான சேவையினை வழங்கும் உத்தியோகத்தர்களை உருவாக்கும் பின்னணியை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
இன்றைய தினம் (27.07.2026) எமது பிரதேச செயலகத்தில் நேர்மை வாரம் தொடங்கி வைக்கப்பட்டது. இன்றைய நாள் நிறுவன ரீதியான நேர்மையை மேம்படுத்தும் நாள். இதன் கருப்பொருள் "சட்டத்தை மதிக்கும் நேர்மை மிக்க அரச சேவை".
 
 
2026080503
 
FaLang translation system by Faboba