அச்சிடுக
பிரிவு: Service Cluster

பிறப்பு பதிவு

வீட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்

  • பிறப்பு நிகழ்ந்து 07 நாட்களுக்குள் கிராம அதிகாரிக்கு அறிவிக்கவும்.
  • கிராம அதிகாரியினால் பிறப்பு பற்றிய அறிக்கை பிரதேச பதிவாளருக்கு அறிவிக்கப்படும்.
  • பிறப்பு பதியப்படுவது பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளாரினால் ஆகும்.
  • சரியாக பூரணப்படித்தப்பட்ட பிரதிக்கினை பிரதேசத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளருக்கு பெற்று தரவும். பிரதிக்கினை பதிவாளரிடம் பெற்றுக்கொள்ள முடியும்.
  • தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்,
  1. தந்தை
  2. தாய்
  3. பிறப்பு நிகழ்ந்த போது அருகில் இருந்த நபர்
  4. பாதுகாவலர்
  • பிறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்குள் பிறப்பினை இலவசமாக பதிவு செய்துக்கொள்ள முடியும். பிறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்கு பின் பிறப்பினை பதிவுசெய்துக்கொள்ள முடிவதுடன் அதற்காக காலங்கடந்த பிறப்பினை பதிவு செய்தல் விபரத்தினை பார்க்க.
  • தகவல் அளிப்பவருக்கு இலவசமாக பிறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.

கிராமிய வைத்தியசாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்

  • பிறப்பு பதியப்படுவது பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளாரினால் ஆகும். பிறப்பு நிகழ்ந்தது கிராமிய வைத்திய சாலையிலாயின், அப்பிரதேசத்தில் உள்ள பதிவாளருக்கு பிறப்பினை பதிவுசெய்வதற்கு அறிவிக்கவும்.
  • பிறப்பினை பதிவுசெய்வதற்கு தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்,
  1. தந்தை
  2. தாய்
  3. பிள்ளை பிறந்த நேரம் அங்கு இருந்த நபர்
  4. வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி
  • பிறப்பினை அறிவிப்பதற்கான பிரதிக்கினையினை பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் பெற்றுக்கொள்ளவும்.
  • சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்,
  1. சரியாக பூரணப்படுத்தப்பட்ட பிரதிக்கினை.
  2. பிறப்பு நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு வைத்திய சாலையினால் வழங்கப்பட்ட அறிக்கை.
  • பிறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்குள் பிறப்பினை இலவசமாக பதிவு செய்துக்கொள்ள முடியும்.
  • தகவல் அளிப்பவருக்கு இலவசமாக பிறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.
  • மேலதிக தகவல்கள் தேவையாயின் அருகில் உள்ள பிதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரனை சந்திக்கவும்.

பொது வைத்தியசாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்

  • பிறப்பினை பதிவு செய்வதற்காக பிறப்பு நிகழ்ந்த பொது வைத்திய சாலையில் உள்ள பிறப்பு மற்றும் இறப்பு பதிவுசெய்யும் பதிவாளருக்கு அறிவிக்கவும்.
  • பிறப்பினை பதிவுசெய்வதற்கு தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்,
  1. தந்தை
  2. தாய்
  3. பிள்ளை பிறந்த நேரம் அங்கு இருந்த நபர்
  4. வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி
  • பிறப்பினை அறிவிப்பதற்கான பிரதிக்கினையினை பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் பெற்றுக் கொள்ளவும்.
  • சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்,
  1. சரியாக பூரணப்படுத்தப்பட்ட பிரதிக்கினை
  2. .பிறப்பு நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு வைத்திய சாலையினால் வழங்கப்பட்ட அறிக்கை
  • 03 மாத கால எல்லைக்குள் பிறப்பினை இலவசமாக பதிவுசெய்துக்கொள்ள முடியும்.
  • தகவல் அளிப்பவருக்கு இலவசமாக பிறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.
  • மேலதிக தகவல்கள் தேவையாயின் அருகில் உள்ள பிதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரனை சந்திக்கவும்.

தனியார் வைத்தியசாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்

  • பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தில் பிறப்பு, இறப்பு பதிவாளரால் பிறப்பு பதிவுசெய்யப்படுகிறது.
  • பிறப்பு தனியார் வைத்தியசாலையில் நிகழ்ந்தால் அத்தகையை பிறப்பை அப்பிரதேச பதியவாளருக்கு அறிவித்தல்.
  • பிறப்பைப் பற்றிய தகவல்களை வழங்க பொருத்தமான நபர்கள்
  1. தந்தை
  2. தாய்
  3. பிறப்பு நிகழ்ந்தபோது சமூகமளித்திருந்த நபர்
  4. அந்த வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரி
  • பிறப்பை அறிவிப்பதற்காக பிறப்பு, இறப்பு பதிவாளரிடமிருந்து தகுந்த வெளிப்படுத்தல் படிவத்தைப் பெற்றுக்கொள்ளுதல்.
  • சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
  1. சரியாகப் பூர்த்திசெய்யப்பட்ட வெளிப்படுத்தல்.
  2. பிறப்பு நிகழ்ந்தததை நிரூபிப்பதற்கு வைத்தியசாலையிலிருந்து வழங்கப்பட்ட ஆவணம்.
  • பிறப்பு நிகழ்ந்து 3 மாதங்களுக்குள் பிறப்பை இலவசமாகப் பதிவுசெய்துகொள்ள முடியும்.
  • பிறப்புச் சான்றிதழ் பிரதியொன்று தகவல் அளிப்பவருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
  • மேலதிக தகவல்களுக்கு உங்கள் பிரதேசத்தின் பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட செயலாளரைச் சந்திக்கவும்.

பதிவுசெய்யப்படாத பிறப்பு பதிவு

காலம்கடந்த பிறப்பினை பதிவு செய்தல்

  • பிறப்பு நிகழ்ந்து 03 மாதங்கள் பிறப்பை பதிவுசெய்யாமலிருந்தால் அதை பதிவுசெய்யலாம்.
  • பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிரதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளருக்கு வெளிப்படுத்தலைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • இதற்குத் தகுதியானவர்கள்
  1. இதில் ஆர்வம்காட்டுகின்ற எவரேனும் ஒருவர்
  2. பெற்றோர்களில் ஒருவர்.
  • அறவிடப்படும் கட்டணம் ரூ.50.00
  • பிறப்பு நிகழ்ந்ததிலிருந்துஒரு வருடத்திற்கு வெளிப்படுத்தலுடன் பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • பெற்றோர் விவாகம் செய்திருந்தால் விவாக சான்றிதழ்
  • பிறந்த இடத்தையும் திகதியையும் நிரூபிப்பதற்கு பின்வரும் ஆவணங்களில் ஒன்று
           ♦ வைத்தியசாலை பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
           ♦ கிராம உத்தியோகத்தர் பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
           ♦ தோட்ட பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
           ♦ பொது சுகாதார அதிகாரியின் சான்றிதழ்
  • பிறப்பு நிகழ்ந்து ஒரு வருடத்தின் பின்னர் வெளிப்படுத்தலுடன் பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
          ♦ பெற்றோர் விவாகம் செய்திருந்தால் விவாக சான்றிதழ்
          ♦ வெற்று பெறுபேற்று தாள்
          ♦ பிறந்த இடத்தையும் திகதியையும் நிரூபிப்பதற்கு பின்வரும் ஆவணங்களில் ஒன்று
             ♣  வைத்தியசாலை பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
             ♣ கிராம உத்தியோகத்தர் பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
             ♣ தோட்ட பிறப்பு அறிக்கை அல்லது சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
             ♣ பொது சுகாதார அதிகாரியின் சான்றிதழ்
         ♦ மேற்குறிப்பிட்ட ஆவணங்களில் எதுவும் இல்லாத சந்தர்ப்பங்களில்,
             ♣ சுகாதார அபிவிருத்தி பதிவேடு
             ♣ ஞானஸ்னான சான்றிதழ்
             ♣ பாடசாலை அனுமதி பதிவேட்டின்/மாணவர் அறிக்கையின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதி
             ♣ தோட்ட நலனோம்பல் அதிகாரியின் அறிக்கை
             ♣ பிறப்பு நிகழ்ந்த திகதியை ஒட்டி நேரம் கணிக்கப்பட்ட ஜாதக பதிவின் பிரதி
         ♦ இந்த ஆவணங்களில் எதுவும் இல்லாவிட்டால், அறிந்த விடயங்களை வெளிப்படுத்தும் ஒரு சத்திய கடதாசி.
 

அனுமான வயதுச்சான்றிதழ் வழங்கல்

  • பிறப்பினை பதிவுசெய்ய முடியாத வயது 14ஐ விட குறைந்த பிள்ளைகள் சம்பந்தமாக அனுமான வயதுச் சான்றிதழ் வழங்கப்படும்.
  • அனுமான வயதுச்சான்றிதழ் வழங்கப்படுவது,

          ♦அரசின் அனுமதிப்பெற்ற பிள்ளை காப்பகத்தின் பிள்ளைகள்

          ♦அரசின் அனுமதிப்பெற்ற பிள்ளை காப்பகத்தின் பிள்ளைகள் அல்லாத வேறு தனியாரின் பாதுகாப்பில் உள்ள பிள்ளைகள்

  • அரசின் அனுமதிப்பெற்ற பிள்ளை காப்பகத்தின் பிள்ளைகள் பிரதிக்கினையுடன் சமர்ப்பிக்கப்படவேண்டிய ஆவணங்கள்

          ♦ பிள்ளை காப்பகத்தின் நிருவாகியின் சத்தியக்கூற்று

          ♦ அரசின் வைத்திய அலுவலர் மூலம் பிள்ளையின் வயதினை அனுமானித்து வழங்கப்பட்ட வைத்தியசான்றிதழ்

          ♦ பிள்ளை சம்பந்தமான விபரத்தினை உள்ளடக்கிய வேறு ஆவணங்கள் (இருந்தால் மட்டும்)

  • அரசின் அனுமதிப்பெற்ற பிள்ளை காப்பகத்தின் பிள்ளைகள் அல்லாத வேறு தனியாரின் பாதுகாப்பில் உள்ள பிள்ளைகள் பிரதிக்கினையுடன் சமர்ப்பிக்கப்படவேண்டிய ஆவணங்கள்

          ♦ பாதுகாவலரின் சத்தியக்கூற்று

          ♦ பிள்ளை பாதுகாவலரின் பாதுகாப்பில் உள்ளார் என உறுதிப்படுத்தக்கூடிய

               ♦ கிராம அலுவலரின் சான்றிதழ் அல்லது

               ♦ சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு  அலுவலரின் சான்றிதழ் அல்லது

               ♦ சமூக சேவைகள் திணைக்களத்தின் சான்றிதழ் அல்லது

               ♦ பொலிஸ் பரிசோதகரினால் வழங்கப்பட்ட சான்றிதழ்

          ♦ அரசின் வைத்திய அதிகாரியினால் பிள்ளையின் வயதினை அனுமானித்து வழங்கப்பட்ட வைத்திய சான்றிதழ்

          ♦ சுகாதார வளர்ச்சி  குறிப்பின் பதிவேடு

          ♦ பிள்ளை பாடசாலை செல்லுமாயின் பாடசாலையில் அனுமதித்த பதிவேட்டின் பிரதி

  • மேலதிக விபரங்கள் தேவைப்படின் அருகில் உள்ள பிரதேசச் செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரை சந்திக்கவும்.

பிறப்பு சான்றிதழில் உட்புகுத்தப்பட்ட விபரத்தினை திருத்தியமைத்தல்

  • பிறப்பு பதிவு செய்தல் குறிப்பு,

         ♦01 வது கூட்டின் விபரம் (பிறந்த திகதி மற்றும் பிறந்த இடம்)

         ♦03 வது கூட்டின் விபரம் (பால்)

         ♦05 வது கூட்டின் விபரம் (தாயின் விபரங்கள் அனைத்தும்)(பிறப்பினை பதிவுசெய்ததன் பின் தாயின் பெயர்மாற்றப்பட்டிருந்தால், பெயர் மாற்றம் இந்த ஒதுக்கீட்டின் கீழ்செய்ய முடியாது)

         ♦09 வது கூட்டின் விபரம் (தகவல் அளிப்பவரது விபரங்கள்) திருத்தப்பட முடியும்.

          ♦பிறப்புச்சான்றிதழுக்குரிய நபர்

          ♦தந்தை அல்லது தாய்

          ♦சட்டமுறையான பாதுகாவலர்

          ♦பிறப்புச் சான்றிதழில் உள்ள ஏதாவது விபரம் பற்றி அதிருப்தியடைந்த நபர்

  • பிரதிக்கினைக்கு வழங்கப்பட வேண்டிய முத்திரைக்கட்டணம் 5.00 ஆகும்.
  • பிரதிக்கனை திருத்த உத்தேசித்த பிறப்புச்சான்றிதழின் உறுதிப்படித்தப்பட்ட பிரதியினை கட்டாயம் இணைத்தல் வேண்டும். விண்ணப்பத்தின் உறுதிதன்மையினை பேணுவதற்காக  எழுத்து மூல சாட்சியங்ளை சமர்ப்பிக்க.
  • பிரதிக்கனை மூலம் செய்யப்படும் விண்ணப்பத்தின் உறுதிதன்மையினை பேணுவதற்கான எழுத்து மூல சாட்சியங்கள் சில கீழ் குறிப்பிடப்பட்டுள்ளன.,

         ♦பெற்றோரின் விவாகச் சான்றிதழ்

         ♦பிள்ளை பெயர்ப்பட்டியல்/ சகோதர பெயர்ப்பட்டியல்

         ♦தந்தை/ தாயின் பிறப்புச்சான்றிதழ்

         ♦பெற்றோரின் விவாகத்தினை பதிவுசெய்ததன் பின் பிறந்த பிள்ளையின் பிறப்புச்சான்றிதழ்

         ♦விவாகத்தினை பதிவு செய்ததன் பின் பிறந்த பிள்ளை அல்லாவிடில், விடயத்திற்குரிய பிள்ளைக்கு மூத்த அல்லது இளைய பிள்ளையின் பிறப்புச்சான்றிதழ்

         ♦வைத்தியசாலை, மகபேற்று இல்லம் என்பவற்றில் உள்ள குறிப்புகளின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி அல்லது மகபேற்று தாதியின் ஆவணத்தின் பிரதி.

         ♦மாணவர் அறிக்கை, பிள்ளையினை பாடசாலையில் அனுமதித்தல் ஆவணத்தின் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி

         ♦விடயதாரி மற்றும் பெற்றோரின் பெயரினை உள்ளடக்கிய வாக்காளர் பெயர் பட்டியல்

         ♦தந்தை இறந்திருந்தால் அவரின் இறப்புச்சான்றிதழ்

மகவேற்பு செய்தல்