அச்சிடுக
பிரிவு: Banner Links

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 

சமுர்த்தி பற்றிய அறிமுகம்

இலங்கையில் வறுமையினைக் குறைப்பதற்கு   1948ஆம் ஆண்டின் சுதந்திரத்திற்கு பின்னால் நலன்புரி நோக்கங்களை கொண்ட பல வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன . 1994ஆம் ஆண்டு நாட்டின் வறுமை ஒழிப்பு நிகழ்ச்சி திட்டமாக சமுர்த்தி இயக்கத்தை அமுல்படுத்தி வறுமையை ஒழிக்கும் பொருட்டு  இந்நிகழ்ச்சி திட்டதிற்காக அதிகாரம் கொண்ட நிறுவனமும் ஒழுங்கமைப்பும் அவசியம் என்பதையும் முறையாகப் புரிந்து கொண்ட அரசாங்கம் சமுர்த்தி ஆணையாளர் நாயகத்திணைக்களத்தையும் சமுர்த்தி அதிகார சபையையும் நிறுவி நிவாரணத்தை விநியோகிப்பதற்கு மேலதிகமாக பாரிய அபிவிருத்தி செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கையையும் எடுத்தது .இலங்கையில் வறுமையினைக் குறைப்பதற்கு   1948ஆம் ஆண்டின் சுதந்திரத்திற்கு பின்னால் நலன்புரி நோக்கங்களை கொண்ட பல வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன . 1994ஆம் ஆண்டு நாட்டின் வறுமை ஒழிப்பு நிகழ்ச்சி திட்டமாக சமுர்த்தி இயக்கத்தை அமுல்படுத்தி வறுமையை ஒழிக்கும் பொருட்டு  இந்நிகழ்ச்சி திட்டதிற்காக அதிகாரம் கொண்ட நிறுவனமும் ஒழுங்கமைப்பும் அவசியம் என்பதையும் முறையாகப் புரிந்து கொண்ட அரசாங்கம் சமுர்த்தி ஆணையாளர் நாயகத்திணைக்களத்தையும் சமுர்த்தி அதிகார சபையையும் நிறுவி நிவாரணத்தை விநியோகிப்பதற்கு மேலதிகமாக பாரிய அபிவிருத்தி செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கையையும் எடுத்தது .சமுர்த்தி திட்டமானது வறுமை நிவாரணத்தை மாத்திரம் விநியோகிக்கும் நிகழ்ச்சித்திட்டம் ஒன்றல்ல .அது பாரிய ஒரு பொருளாதார , சமூக அபிவிருத்தித்திட்டமாகும் . சமூக வலுப்படுத்தலின் ஊடாக வறிய மக்களை ஒழுங்கமைத்துச் செய்தல் , அவர்களை சமூக அபிவிருத்திப் பணியில் ஈடுபடுத்தல் , பரந்த சமூக அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தல் , சமூக துஷ்பிரயோகம் , போதைப்பொருட்கள் தீயபழக்கங்கள் ஆகியவற்றிலிருந்து மக்களை மீட்டெடுப்பதுடன் சமுர்த்தி  திட்டத்தினூடாக கிராமிய பிரதேசங்களில் அடித்தள வசதிகளை மேம்படுத்தல் போன்ற மிகப்பாரியதும் பரந்ததும் வெற்றிகரமானதும் பலமுள்ளதுமான திட்டமென அறியப்படுகின்றது .


1996ஆம்   ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட சமுர்த்தி வேலைத்திட்டமானது இலங்கையிலுள்ள வறுமை நிலையினையும் வறுமையினைக் குறைப்பதற்கும் ஒவ்வொரு காலப்பகுதியிலும் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளை சிறப்பாக ஆராய்ந்த பின்னர் தயாரிக்கப்பட்ட ஒரு வேலைத்திட்டமாகும் . 


 "வறியோர் குறைந்த சுபீட்சமிகு இலங்கை " என்ற குறிக்கோளை கொண்ட சமுர்த்தி திட்டமானது யாழ் மாவட்டத்தில் 1997ஆம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது . இதன் தொடர்ச்சியாக 1998ஆம் ஆண்டு வேலணை பிரதேச செயலக பிரிவிலே சமுர்த்தி ஊக்குவிப்பாளர்களும் 2000ஆம் ஆண்டிலே சமுர்த்தி முகாமையாளர்களும் நியமிக்கப்பட்டு வேலைத்திட்டம் விஸ்தரிக்கப்பட்டது . 2003ஆம் ஆண்டு   வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 30 கிராம சேவையாளர் பிரிவுகளில் 15 கிராம சேவையாளர் பிரிவுகளை கொண்டதாக வேலணை , புங்குடுதீவு சமுர்த்தி வங்கி சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன .

சமுர்த்தி திட்டங்கள்

சர்வதேச மற்றும் உள்நாட்டு அனுபவங்களையும் முன் மாதிரிகளையும் ஒன்று சேர்த்து மூன்று வழிகளின் ஊடாக சமுர்த்தி வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது . அவையாவன சர்வதேச மற்றும் உள்நாட்டு அனுபவங்களையும் முன் மாதிரிகளையும் ஒன்று சேர்த்து மூன்று வழிகளின் ஊடாக சமுர்த்தி வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது . அவையாவன  

* நலன்புரித்திட்டம்  

* கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டம்  

* வங்கித்திட்டம்

 * நலன்புரித்திட்டம் 

i . சமுர்த்தி நிவாரணம் 

வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட பிரிவினருக்கு வழங்கப்படுகின்ற இந் நிவாரணமானது யாழ் மாவட்டத்தில் 2005 ஆம் ஆண்டில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது . பல நோக்கு கூட்டுறவு சங்கங்களில் பொருளாகவும் சமுர்த்தி வங்கி சங்கங்களில் பண முத்திரையாகவும் கட்டாய சேமிப்பு , சமூக பாதுகாப்பு வீட்டு லொத்தர் போன்ற அமைப்புக்களை கொண்ட  நிவாரணமானது தற்போது பண முத்திரையாகவும் கட்டாய சேமிப்பு வீட்டு லொத்தர் சமூக பாதுகாப்பு என்ற அமைப்புக்களை கொண்டு விளங்குகின்றது .   பிரதேச செயலக பிரிவிலே 30 சதவீதமானோர் சமுர்த்தி நிவாரணத்தை தற்போது பெற்று வருகின்றனர் .

சமுர்த்தி முத்திரையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள்

 சமுர்த்தி முத்திரையின் பெறுமதி

 பணமுத்திரை  கட்டாய சேமிப்பு  வீட்டு லொத்தர்  சமூக பாதுகாப்பு
 1500/=  1250/=  100/=  50/=  100/=
 2500/=  2150/=  200/=  50/=  100/=
 3500/=  3050/=  300/=  50/=  100/=

 

ii சிப்தொற புலமைப்பரிசில் திட்டம்  

சமுர்த்தி முத்திரை பெறுகின்ற வறிய குடும்பங்களைச் சேர்ந்த க.பொ.த (சா/த )பரீட்சையில் சித்தியடைந்த உயர் கல்வியை தொடரும் மாணவர்களிற்கு மாதாந்தம் பத்தாயிரம் ரூபா இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும் .

கிராம அபிவிருத்தி வேலைத்திட்டம்  

கிராமத்தின் வறுமைப்பட்ட மக்கள் பிரிவினருக்கு பயன் தரக்கூடியதும் ஒரு வருட காலத்திற்குள் செய்து முடிக்க கூடியதுமான கருத்திட்டங்கள் இந் நிகழ்ச்சித்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன .

i பௌதீக அபிவிருத்தி  

ii கிராமிய மக்களின் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக   

iii ஆன்மீக அபிவிருத்தி

வங்கித்திட்டம்  

சமுர்த்தி வேலைத்திட்டத்தின் பிரதான அங்கமாக குறுநிதியியல் உள்ளடக்கப்பட்டு அதற்காக தனிப்பட்ட ஸ்தாபன கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது . சமுர்த்தி வங்கி சங்கத்தினூடாக குறைந்த வருமானம் பெறுவோருக்கு கீழ் குரிப்பியாப்படுகின்ற விடயங்கள் கிடைக்கப்பெறுகின்றன.

i வறியோருக்கு சந்தர்ப்பம் வழங்குதல்  

ii வலுவூட்டுதல்   

iii பாதுகாப்புத்தன்மை

சமுர்த்தி வங்கி சங்கத்தின் பிரதான பணிகள்

i வைப்புக்களை ஏற்றல்  

ii கடன்களை விடுவித்தல்   

iii காப்புறுதி

சமுர்த்தி வங்கி சங்கத்திலுள்ள வைப்பு கணக்குகளின் வகைகள்

i அங்கத்தவர் வைப்பு   

ii பங்குக்கணக்கு   

iii குழு வைப்பு

iv அங்கத்தவர் அல்லாதோர்

v திரியமாதா வைப்பு

vi சிறுவர் வைப்பு

vii சிசுரக்க வைப்பு

viii கட்டாய சேமிப்பு

கடன் வழங்குதல்  

புதிய வருமானமீட்டும் கருத்திட்டங்களை ஆரம்பிக்கவோ , ஏற்கனவே உள்ள கருத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கோ தேவையான நிதி வசதிகளை வழங்குவதற்கு கடன்திட்டங்கள் பல அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கடனின் வகைகள்

i பயிர்ச்செய்கை கடன்   

ii மீன்பிடிக்கடன்   

iii சுயதொழில் கடன்

iv நுகர்வுக்கடன்

v இடர் கடன்

vi வீட்டுக்கடன்

vii ரட்டவிரு கடன்

viii திவிநெகும இதர கடன்

viii வாழ்வாதார அபிவிருத்தி கடன்

viii மகுட அபிவிருத்தி கடன்

மேற்குறிப்பிட்ட திட்டங்களுடன் கீழ்வரும் திட்டங்களும் சமுர்த்தியால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

சமூக அபிவிருத்தி  

இலக்காக கொள்ளப்பட்டவர்களின் சமூக ரீதியான பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இடம் பெறுவது

i போதை நிவாரண வேலைத்திட்டம்   

ii சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுக்கும் வேலைத்திட்டம்   

iii தற்கொலை முயற்சியை தடுக்கும் வேலைத்திட்டம்

iv சர்வதேச தினங்களுடன் இணைந்ததான திட்டம்

v சர்வதேச மகளிர் தினம்

vi சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம்

vii சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம்

viii சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்

ix சர்வதேச எழுத்தறிவு தினம்

பல்வேறு நலன்புரி வேலைத்திட்டங்கள்  

i அங்கவீனமுற்ற படைவீரர் நலன்புரி   

ii முதியோர் நலன்புரி   

iii திரிய பியச வீடமைப்புத்திட்டம்

சிறுவர் கழக வேலைத்திட்டம்  

சர்வதேச தினங்கள் கலாசார வைபவங்கள் சமய வைபவங்களை ஒட்டி பல்வேறு மேம்பாட்டு மற்றும் தேசிய வைபவங்களை ஒழுங்கு செய்வதும் உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது .

திவிநெகும  

திவிநெகும சமுதாய அடிப்படையிலான வங்கிகள் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காகவும் முதலீட்டு வாய்ப்புக்களை அபிவிருத்தி செய்வதற்காகவும் உற்பத்தி வாய்ப்பினை அபிவிருத்தி செய்வதற்காகவும் கடன் வசதிகளை வழங்குவதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது .

FaLang translation system by Faboba