"செழிப்பான எதிர்காலம் சௌபாக்கியமான நாடு"என்ற தொனிப்பொருளில் எமது நாட்டின் 73வது சுதந்திர தின நிகழ்வு 2021.02.04ம் திகதியான இன்று எமது பிரதேச செயலகத்தில் காலை 8.00 மணிக்கு தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது. அதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் 01 நிமிட அக வணக்கம் இடம்பெற்றது. எமது நாடு சுதந்திரம் அடைந்த வரலாறு பற்றியும் நாட்டின் அபிவிருத்திக்கு அரச அலுவலர்கள் கடமையாற்றுவதன் அவசியம் பற்றியும் உதவி பிரதேச செயலர் தமது உரையில் எடுத்துக் கூறினார். இவ் வருட சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மரக் கன்றுகள் நடும் திட்டத்திற்கிணங்க பிரதேச செயலக வளாகத்திலும் கிராம அலுவலர் பிரிவுகளிலும் காலை 9.29 ற்கு சுப முகூர்த்த வேளையில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டது. அதனை தொடர்ந்து சிரமதான பணிகள் நடைபெற்றது.

























