குறைந்த வருமானம் பெறும் மக்களை வலுவூட்டல் வேலைத்திட்டம் (2025-2027) தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளித்தல் 09.01.2025 ஆம் திகதி வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு.க.சிவகரன் தலைமையில் நடைபெற்றது.இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் இதில் பல்வேறு திணைக்களங்களினுடைய உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.


























