நேற்று (24.11.2025)
இலங்கை சமூகப்பாதுகாப்பு சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களுக்கான 2024 ம் வருடத்திற்கான தேசிய ரீதியிலான கௌரவிப்பு நிகழ்வானது திருகோணமலையில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் 1 மில்லியனுக்கு மேலான தொகைக்கான அடைவு மட்டத்தை பெற்றுக்கொண்ட பிரதேச செயலகங்களின் வரிசையில் எமது வேலணைப் பிரதேச செயலகமும் கௌரவிக்கப்பட்டதுடன் இவ் அடைவு மட்டத்தை பெற்றுக் கொள்ள மூல காரணமாக இருந்து வினைத்திறனாக செயலாற்றிய உத்தியோகத்தர்களையும் கௌரவிக்கும் முகமாக அவர்களின் சேவையினைப் பாராட்டி பாராட்டுப்பத்திரங்கள் மற்றும் பதக்கங்கள் என்பவற்றை சமூக பாதுகாப்பு சபையின் சார்பாக பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் அவர்களினால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இந் நிகழ்வில் பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், கௌரவத்தை பெற்றுக்கொள்ளும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

























