User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 
 உலக சிறுவர் தினம்  நிகழ்வுகள்- 2021
இவ்வருட உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பிரதேச செயலரின் ஒழுங்கமைப்பில் சுவிஸ் துர்க்கா அறக்கட்டளையின் அனுசரணையுடன் தேவையுடைய சிறுவர்களிற்கு தமது கற்றலுக்கான போக்குவரத்து வசதிகளை இலகுபடுத்தும் வகையில் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு செய்யப்பட்டது.
சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் நாடளாவிய ரீதியில் இடர் நிலைகளில் உள்ள சிறுவர்களை இனம் கண்டு அவர்கட்கான உளசமூக ஆதரவை வழங்கும் திட்டத்தின் கீழ் தேவையுடைய சிறுவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
வேலணை மத்திய கல்லூரியுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட zoom ஊடான நிகழ்வில் "COVID-19 விடுமுறை காலப்பகுதியில் சிறுவர்களின் நேர்மறையான தகவமைப்பு உத்திகள்" எனும் தலைப்பில் வேலணை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக சமூகவியல் துறைத் தலைவர் மதிப்பிற்குரிய Dr.s.ஜுவசுதன் வளவாளராக கலந்து கொண்டிருந்தார் . நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்தும் கலந்துரையாடியும் பயன் பெற்றனர்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இடர் நிலைகளில் உள்ள சிறுவர்களை இனம் கண்டு அவர்கட்கான உளசமூக ஆதரவை வழங்கும் திட்டத்தின் கீழ் தேவையுடைய சிறுவர் ஒருவரின் கற்றல் செலவினை பொறுப்பேற்று முதற்கட்ட அன்பளிப்பு வழங்கப்பட்டது.
தொல்புரம் கிழக்கு சுழிபுரத்தை சேர்ந்த திரு பா. சிவநாதன் அவர்களால் இவ் அன்பளிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து குறித்த சிறுவனின் கல்விக்கான செலவை அவர் ஏற்ளுள்ளதோடு சிறுவன் தான் ஒரு வைத்தியராக வருவதே தனது இலக்கு என குறித்த நிகழ்வில் உரையாற்றி இருந்தார்.
அனைத்துக்கும் முன்னுரிமை சிறுவர்கள்- என்னும் தொனிப்பொருளில், பட்டினி அற்ற மரங்கள் நிறைந்த தார்மீக நாடொன்றை கட்டியெழுப்பும் சிறுவர் சுற்றாடல் பாதுகாப்பு படையனியை தாபித்தல் மற்றும் 1 லட்சம் பலா மரக் கன்றுகளை நாட்டும் தேசிய வேலைத்திட்டம்.
மதிப்பு மிக்க வேலணை உதவி பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஏற்பாட்டில் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையில் 100 பலா மரக் கன்றுகள் வேலணை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிறுவர் கழக சிறுவர்களுக்கு வழங்கப்பட்டதுடன் கற்றல் உபகரணமும் மற்றும் போசாக்கு பொதி வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு வேலணை சரஸ்வதி பவுண்டேசன் நிதி அனுசரணை வழங்கியிருந்தார்கள்.
இடர் நிலைகளில் உள்ள சிறுவர்களை இனம் கண்டு கொரோனா கால இடரில் போசாக்கு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தேவையுடைய சிறுவர்களிற்கு வேலணை சரஸ்வதி பவுண்டேசன் (UK) நிறுவனத்தின் அனுசரணையுடன் போசாக்கு உணவு பொதிகள் சிறுவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டதோடு covid 19 விடுமுறை காலப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறான பல்வேறு நிகழ்வுகள் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக இடம்பெற்றது.
 
244421428 918454129050667 5673550546607561068 n 244430923 918418192387594 5529004212364697476 n 244197461 918240125738734 1952604969755670790 n
 
243995414 918209249075155 422606270844382926 n 244081949 918209399075140 1927296378478615653 n 243590275 918262595736487 8883006319694780240 n
          
 
 
          
 
 

News & Events

10
අගෝ2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
පෙබ2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
පෙබ2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
පෙබ2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top