சர்வதேச மாற்றாற்றலுடையோர் தின விழா -2022
சர்வதேச மாற்றாற்றலுடையோர் தின விழா வேலணை பிரதேச செயலகத்தின் பழைய மாநாட்டு மண்டபத்தில் 23.12.2022 காலை 10 மணிக்கு வேலணை பிரதேச சமூக சேவை பகுதியினரால் நடாத்தப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வேலணை பிரதேச செயலர் திரு . கைலாசப்பிள்ளை சிவகரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக (உதவி பிரதேச செயலர் ) திரு. ந. பிரணவன் அவர்களும் , (கணக்காளர்) செல்வி.ந.பொன்ராணி அவர்களும், (சமூக சேவை உத்தியோகத்தர்) திருமதி.அ.அருந்தவராஜா அவர்களும் , கௌரவ விருந்தினராக (மாவட்ட ஒருங்கிணைப்பாளர், சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்.) திரு.ந.ரதிக்குமார் அவர்களும் (இணைப்பாளர் FAIRMED நிறுவனம்) திருமதி. ஜோ.சுமங்கலை அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். மேலும் மாற்றாற்றலுடையோர்களின் கலைநிகழ்ச்சிகளும் அவர்களுக்குரிய பரிசில் வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றன.
















































