2024.01.01 - புதிய ஆண்டினை வரவேற்றல்
இன்றைய தினம் 2024/01/01 புதிய ஆண்டினை வரவேற்கும் முகமாக பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டதோடு அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும் என சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளப்பட்டது. பின்னர் இலங்கையின் தேசிய உணவான பாற்சோறும் வழங்கப்பட்டு சம்பிரதாய பூர்வமாக அலுவலக செயற்பாடுகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.



























