User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 

பிரதேச மட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் அவர்களது தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் (28.05.2025) இடம் பெற்றது. இக் கூட்டத்தில் பிரதேச செயலாளர் திரு.க.சிவகரன், உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகளும் மற்றும் திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களின் அதிகாரிகளும் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அலுவலர்களும் கிராம மட்டத்தில் இயங்கும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றில் மிக அவசியமாக நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அவர்கள் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டார். அத்துடன் பொது மக்களின் விசேட கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

1 2

1 2

News & Events

10
අගෝ2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
පෙබ2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
පෙබ2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
පෙබ2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top