எமது பிரதேச செயலகத்தின் நலன்புரி சங்கத்தால் ஒழுங்கமைப்பு செய்யப்பட்ட 2020ம் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா 2020.01.16ம் திகதி காலை 9.30 மணிக்கு பிரதேச செயலர் தலைமையில் ஆரம்பமானது. இவ் விழாவிற்கான வேலைகளை அனைத்து உத்தியோகத்தர்களும் சிறந்த முறையில் பங்கெடுத்து செய்தனர். பொங்கல் பூஜை சிறப்பாக நிறைவுற்ற பின்னர் எமது உத்தியோகத்தர்களால் தயார் செய்யப்பட்ட மதியபோசனம் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்பட்டு இவ் விழா இனிதே நிறைவடைந்தது.



























