எமது நோக்கு
"புதிய தொழில்நுட்பங்களுடன் இணைந்த வினைத்திறனும், பயனுறுதியும் கொண்ட பொதுச்சேவை "எமது கொள்கை
மக்களின் அபிலாசைகட்கும் அடையாளம் காணப்பட்ட தேசிய முன்னுரிமைகட்கும் ஏற்றதான வினைத்திறனும், பயனுறுதியும், நல்லாட்சியும் கொண்ட பொதுச்சேவையினை வழங்கி உயர்வான நிர்வாக நடைமுறையை பிரதேச, கிராமிய மட்டங்களில் உத்தரவாதப்படுத்துதல்.
எமது பிரதேசம்
யாழ்மாவட்டத்தின் தென்மேற்கு திசையில் உள்ள 7 தீவுகளில் தீவுகள்தெற்கு பிரதேசமானது மிகப்பெரிய பிரதேசமாகும் இது யாழ் நகருக்கு தென்மேற்கு திசையில் 15 km துரத்திலும் தலைநகர் கொழும்பிலிருந்து 410 Km துரத்திலும் அமைந்துள்ளது. வேலணை பிரதேசத்தின் பரப்பு 98.4 சதுர கிலோ மீற்றர் ஆகவுள்ளது. இது யாழ்மாவட்டத்தின் பரப்பளவில் அண்ணளவாக 09 வீதமாகும். இதன் எல்லைகள் வடக்கு கடலும் , தெற்கு பண்ணைக்கடலும், கிழக்கு கடலும்,மேற்கு ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவுமாகக் காணப்படுகிறது
தீவகம்தெற்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகத்தில் 30 கிராம சேவையாளர் பிரிவுகளும் 63 கிராமங்களும் உள்ளடங்குகின்றன அத்துடன். உள்ளூராச்சி அமைச்சின்கீழான பிதேச சபையும் இப்பிரதேச எல்லையை உள்ளடக்கியதாக இயங்குகின்றன.
வேலணை பிரதேசத்தில் 1990 காலப்பகுதியில் சனத்தொகை 52728 ஆகவும் குடும்பங்கள் 11004 ஆகவும் காணப்பட்டது. தற்போது 2011 ம் ஆண்டு கணக்கீட்டின்படி சனத்தொகை 17901 ஆகவும் குடும்பங்கள் 5285 ஆகவும் காணப்படுகிறது, அத்துடன் சனத்தொகை அடர்த்தி சதுரக் கிலோமீற்றருக்கு 192 ஆகவும் உள்ளது.
இப் பிரதேச மக்களின் வாழ்வியல் கடல் , விவசாயம் மற்றும் கால்டை வளர்பு சார்ந்ததாவே உள்ளது. குறிப்படத்தக்க சில மக்கள் இங்கு காணப்படும் இயற்கை வளமான பணை சார்ந்ததாக காணப்படுகிறது. மேலும் பணை சார்ந்த சிறு கைத்தொழில்களும் இங்குகாணப்டுகிறது.
பிரதான கிராமங்கள் (தீவுகள்)
வேலணை பிரதேசம் பிரதானமாக நான்கு தீவுகளை கொண்டதாக காணப்படுகிறது.
1.மண்டைதீவு
2.லைடன்தீவு
3.புங்குடுதீவு
4.நயினாதீவு
மண்டைதீவு
யாழ்தீவகற்பத்தின் சிறிய தீவாக மண்டைதீவு காணப்படுகிறது இது கடல்வழிப்பாதை (causeway) மூலம் பிரதான நிலப்பரப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இத்தீவின் மக்களின் வாழ்வியல் கடல் மற்றும் விவசாயம் சார்ந்ததாகவே காணப்படுகிறது. 15.10 சதுர கிலோ மீற்றர் பரப்பளவை கொண்ட இப் பிரதேசம் 3 கிராமசேவகர் பிரிவுகளை கொண்டதாக காண்ப்படுகிறது.
லைடன் தீவு
டச்சுகாரர்களின் ஆட்சியின்போது லைடன்தீவு என அழைக்கப்பட்ட, இத் தீவு அல்லைப்பிட்டி , மண்கும்பான் ,சரவணை மற்றும் வேலணை கிராமங்ளை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது. இதன் பரப்பளவு 44.3 சதுர கிலோ மீற்றர் ஆக காணப்படுவதுடன் 12 கிராமசேவகர் பிரிவுளைகொண்டதாகும்.
புங்குடுதீவு
யாழ்தீவகற்பத்தின் ஒரு தீவாக காணப்படும் இத்தீவு நீண்ட கடல்வழிப்பாதை (causeway) மூலம் லைடன் தீவுடன் இணைக்கப்பட்டுள்ளது. . இதன் பரப்பளவு 33.40 சதுர கிலோ மீற்றர் ஆக காணப்படுவதுடன் 12 கிராமசேவகர் பிரிவுளைகொண்டதாகும். உள்நாட்டுபோர் காரணமாக இடம்பெயாந்த இப் பிரதேசமக்களில் பெரும்பாலனோர் மீளவும் மீள்குடியேறாததால் இப் பிதேச குடித்தொகை குறைவானதாகவே காணப்படுகிறது
கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ளடங்கும் கிராமங்கள்
| தொட.இல | பிரதான கிராமங்கள் (தீவகம்) | கிராம அலுவலர் பிரிவு | கிராம அலுவலர் பிரிவு இல | உள்ளடங்கும் கிராமங்கள் |
| 01 | மண்டைதீவு | மண்டைதீவு கிழக்கு | ஜே/07 | மண்டைதீவு கிழக்கு, சிறுத்தீவு, குருசடித்தீவு |
| 02 | மண்டைதீவு மேற்கு | ஜே/08 | மண்டைதீவு மேற்கு | |
| 03 | மண்டைதீவு தெற்கு | ஜே/09 | மண்டைதீவு தெற்கு | |
| 04 | லைடன் தீவு | அல்லைப்பிட்டி | ஜே/10 | அல்லைப்பிட்டி, வெண்புரவிநகர் |
| 05 | மண்கும்பான் | ஜே/11 | மண்கும்பான் மேற்கு (வட்டார இல . 04), மண்கும்பான் கிழக்கு (வட்டார இல. 05) | |
| 06 | வேலணை வடக்கு | ஜே/12 | இலந்தைவனம், மயிலாப்புலம், சோளாவத்தை | |
| 07 | வேலணை வட கிழக்கு | ஜே/13 | சாட்டி, செட்டிப்புலம் | |
| 08 | வேலணை கிழக்கு | ஜே/14 | அம்மங்கோவிலடி, செம்மன்காடு, துறையூர் | |
| 09 | வேலணை தென் கிழக்கு | ஜே/15 | வேலணை தென் கிழக்கு, செட்டிப்புலம் (பகுதி) | |
| 10 | வேலணை மத்தி கிழக்கு | ஜே/16 | வேலணை மத்தி கிழக்கு, செட்டிப்புலம் (பகுதி) | |
| 11 | வேலணை தெற்கு | ஜே/17 | வங்களாவடி,சிற்பனை,பஸ்கொம்பனியடி,துறையூர் தெற்கு,கண்ணாபுரம் | |
| 12 | வேலணை மத்தி மேற்கு | ஜே/18 | வேலணை மத்தி மேற்கு, அம்பிகைநகர் (பகுதி) | |
| 13 | வேலணை மேற்கு | ஜே/19 | வேலணை மேற்கு, அம்பிகைநகர் (பகுதி) | |
| 14 | சரவணை கிழக்கு | ஜே/20 | சரவணை கிழக்கு | |
| 15 | சரவணை மேற்கு | ஜே/21 | சரவணை மேற்கு, சின்னமடு,மொங்கனைப்புலம் | |
| 16 | புங்குடுதீவு | புங்குடுதீவு வட கிழக்கு | ஜே/22 | ஊரதீவு, வரதீவு |
| 17 | புங்குடுதீவு கிழக்கு | ஜே/23 | மடத்துவெளி, புங்குடுதீவு கிழக்கு | |
| 18 | புங்குடுதீவு தென் கிழக்கு | ஜே/24 | மாதிடல்,வல்லன், வீராமலை | |
| 19 | புங்குடுதீவு கிழக்கு தெற்கு | ஜே/25 | கண்ணகிபுரம், தெங்குத்திடல், குறிச்சிக்காடு கிழக்கு | |
| 20 | புங்குடுதீவு தெற்கு | ஜே/26 | கொட்டைக்காடு, குறிச்சிக்காடு மேற்கு, குறிச்சிக்காடு கிழக்கு, மண்காடு | |
| 21 | புங்குடுதீவு வடக்கு | ஜே/27 | சிவலப்பிட்டி, மானாவெள்ளை,சின்ன இறுப்பிட்டி, கொம்மாபிட்டி | |
| 22 | புங்குடுதீவு மத்தி வடக்கு | ஜே/28 | வடக்கு பெருங்காடு, கரந்தடி,பரந்தாதோட்டம் | |
| 23 | புங்குடுதீவு தென் மேற்கு | ஜே/29 | குறிகட்டுவான்,நடுத்துரித்தி, சங்கத்தர்கேணி | |
| 24 | புங்குடுதீவு மத்தி மேற்கு | ஜே/30 | பெருங்காடு தெற்கு | |
| 25 | புங்குடுதீவு மத்தி கிழக்கு | ஜே/31 | புங்குடுதீவு மத்தி கிழக்கு | |
| 26 | புங்குடுதீவு வடக்கு மேற்கு | ஜே/32 | இறுப்பிட்டி, கழுதைப்பிட்டி | |
| 27 | புங்குடுதீவு மேற்கு | ஜே/33 | கேரதீவு,நுனுக்கல், சின்ன இறுப்பிட்டி | |
| 28 | நயினாதீவு | நயினாதீவு வடக்கு | ஜே/34 | தம்பகைபதி,வல்லிக்காடு,குடலைபேய்,இரட்டைகாளி (வட்டார இல. 1,2,3,4) |
| 29 | நயினாதீவு மத்தி | ஜே/35 | நடுவக்காடு,வெள்ளைபுற்று மண்தரை,வந்துரி,டெஹினம்,கிழக்கிற்காடு | |
| 30 | நயினாதீவு தெற்கு | ஜே/36 | வங்களாவடி,மலையடி,கத்தியாக்குடா (வட்டார இல.6,7,8 ) |
கிராம அலுவலர் பிரிவு ரீதியாக எமது பிரதேசத்தின் மொத்த பரப்பளவு விபரம்
| தொட.இல | கிராம அலுவலர் பிரிவு | கிராம அலுவலர் பிரிவு இல | மொத்த பரப்பளவு (சதுர கி.மீ ) | நில பரப்பளவு (சதுர கி.மீ ) | நீர் பிரதேசம் (சதுர கி.மீ ) |
| 01 | மண்டைதீவு கிழக்கு | ஜே/07 | 6.3 | 6.3 | 0 |
| 02 | மண்டைதீவு மேற்கு | ஜே/08 | 8.1 | 8.1 | 0 |
| 03 | மண்டைதீவு தெற்கு | ஜே/09 | 0.7 | 0.7 | 0 |
| 04 | அல்லைப்பிட்டி | ஜே/10 | 3.8 | 3.8 | 0 |
| 05 | மண்கும்பான் | ஜே/11 | 4.8 | 4.8 | 0 |
| 06 | வேலணை வடக்கு | ஜே/12 | 4.7 | 4 | 0.7 |
| 07 | வேலணை வட கிழக்கு | ஜே/13 | 2.6 | 2.5 | 0.1 |
| 08 | வேலணை கிழக்கு | ஜே/14 | 2.7 | 2.5 | 0.2 |
| 09 | வேலணை தென் கிழக்கு | ஜே/15 | 2.5 | 2.5 | 0 |
| 10 | வேலணை மத்தி கிழக்கு | ஜே/16 | 2.5 | 2.5 | 0 |
| 11 | வேலணை தெற்கு | ஜே/17 | 4.5 | 4.5 | 0 |
| 12 | வேலணை மத்தி மேற்கு | ஜே/18 | 3 | 3 | 0 |
| 13 | வேலணை மேற்கு | ஜே/19 | 3 | 3 | 0 |
| 14 | சரவணை கிழக்கு | ஜே/20 | 6.2 | 5.2 | 1 |
| 15 | சரவணை மேற்கு | ஜே/21 | 4 | 3 | 1 |
| 16 | புங்குடுதீவு வட கிழக்கு | ஜே/22 | 1.6 | 1.4 | 0.2 |
| 17 | புங்குடுதீவு கிழக்கு | ஜே/23 | 4 | 4 | 0 |
| 18 | புங்குடுதீவு தென் கிழக்கு | ஜே/24 | 1.25 | 1 | 0.25 |
| 19 | புங்குடுதீவு கிழக்கு தெற்கு | ஜே/25 | 4.4 | 4.4 | 0 |
| 20 | புங்குடுதீவு தெற்கு | ஜே/26 | 3.1 | 3.1 | 0 |
| 21 | புங்குடுதீவு வடக்கு | ஜே/27 | 2.8 | 2.8 | 0 |
| 22 | புங்குடுதீவு மத்தி வடக்கு | ஜே/28 | 1.75 | 1.5 | 0.25 |
| 23 | புங்குடுதீவு தென் மேற்கு | ஜே/29 | 3.1 | 3.1 | 0 |
| 24 | புங்குடுதீவு மத்தி மேற்கு | ஜே/30 | 2.1 | 2.1 | 0 |
| 25 | புங்குடுதீவு மத்தி கிழக்கு | ஜே/31 | 2.8 | 2.8 | 0 |
| 26 | புங்குடுதீவு வடக்கு மேற்கு | ஜே/32 | 4 | 4 | 0 |
| 27 | புங்குடுதீவு மேற்கு | ஜே/33 | 2.5 | 2.5 | 0 |
| 28 | நயினாதீவு வடக்கு | ஜே/34 | 2.5 | 2.5 | 0 |
| 29 | நயினாதீவு மத்தி | ஜே/35 | 1.5 | 1.5 | 0 |
| 30 | நயினாதீவு தெற்கு | ஜே/36 | 1.6 | 1.5 | 0.1 |
| மொத்தம் | 98.4 | 94.6 | 3.8 | ||
பிரதேச செயலராக பணியாற்றியோர் விபரம்
|
பெயர் |
தொடக்கம் |
வரை |
| M.கார்த்திகேசு |
1972 |
1973 |
| S.சுப்பிரமணியம் |
1973 |
1975 |
| S.தம்பிமுத்து |
1975 |
1976 |
| S.பாலசிங்கம் |
1976 |
1978 |
| A.செந்தில்வடிவேல் |
1978 |
1979 |
| S.குலசேகரம் |
1980 |
1981 |
| A.குணநாயகம் |
1982 |
1983 |
| A.E.நாகராசா |
1983 |
1984 |
| A.மகாலிங்கம் |
1984 |
1985 |
| S.மைதிலி |
1985 |
1986 |
| S.சடாடச்சரசண்முகதாஸ் |
1986 |
1987 |
| N.தனபாலசிங்கம் |
1987 |
1991 |
| E.இளங்கோவன் |
1991 |
1993 |
| V.ரூபினி |
1993 |
1994 |
| K.குணராசா |
1994 |
1995 |
| T.P.பத்தினியம்மா |
1995 |
1996 |
| A.தியாகராசா |
1996 |
1998 |
| S.ரத்தினம் |
1998 |
2002 |
| M.நந்தகோபால் |
2003 |
2011 |
| S.மஞ்சுளாதேவி |
2012 |
2015 |
| T.சுகுணரதி |
2015 |
2017 |
| A.சோதிநாதன் |
2017 |
2021 |
| K. சிவகரன் | 2021 | இன்று வரை |























