மரம் வெட்டுதல் அனுமதி
பனைமரங்கள் தறிப்பதற்கான விண்ணப்பப்படிவம்
* பனைமரம் தறிப்பதற்கான அனுமதிப்பத்திரம் பெற தேவையான ஆவணங்கள்
♦ கிராம அலுவலரின் சிபாரிசுடன் கடிதம்
♦ கிராம அலுவலரின் சிபாரிசுடன் பெற்றுக்கொள்ளப்பட்ட பனைமரம் தறிப்பதற்கான விண்ணப்பப்படிவம்
♦ பனைமரம் உள்ள காணியின் உறுதியின் நிழற்படப்பிரதி
♦ அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் பனைமரம் காணப்படின் அபாயத்தை உறுதிப்படுத்தும் கடிதம்
♦ பனை அபிவிருத்திச் சபைக்கு மீள்நடுகைக் கட்டணமாக பனை ஒன்றிற்கு ரூபா.200.00 இனை செலுத்த வேண்டும்.
♦ வீடுகள், மதில்கள் கட்டுவதாயின் அனுமதிக்கப்பட்ட வரைபடத்தின் நிழற்படப்பிரதி
* குறிப்பு :- பனைமரங்கள் பிரதேச செயலக பிரிவை விட்டு வெளியே கொண்டு செல்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
பனைமரம் தவிர்ந்த வேறு மரங்கள் தறிப்பதற்கான விண்ணப்பப்படிவம் ![]()
* பனைமரம் தவிர்ந்த வேறு மரங்கள் தறிப்பதற்கான அனுமதிப்பத்திரம் பெற தேவையான ஆவணங்கள்
♦ கிராம அலுவலரின் சிபாரிசுடன் கடிதம்
♦ கிராம அலுவலரின் சிபாரிசுடன் பெற்றுக்கொள்ளப்பட்ட உரிய மரம் தறிப்பதற்கான விண்ணப்பப்படிவம்
♦ மரம் உள்ள காணியின் உறுதியின் நிழற்படப்பிரதி
♦ அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் மரம் காணப்படின் அபாயத்தை உறுதிப்படுத்தும் கடிதம்
♦ வீடுகள், மதில்கள் கட்டுவதாயின் அனுமதிக்கப்பட்ட வரைபடத்தின் நிழற்படப்பிரதி
* குறிப்பு :- உரிய மரங்கள் பிரதேச செயலக பிரிவை விட்டு வெளியே கொண்டு செல்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
மண் பெறுவதற்கான அனுமதி
வேலணை பிரதேச செயலக பிரிவிற்குள் மணல் அனுமதி பெறுவதற்கான விண்ணப்பப்படிவம் ![]()
* வேலணை பிரதேச செயலக பிரிவிற்குள் மணல் அனுமதி பெற தேவையான ஆவணங்கள்
♦ கிராம அலுவலரின் சிபாரிசுடன் கடிதம்
♦ கிராம அலுவலரின் சிபாரிசுடன் பெற்றுக்கொள்ளப்பட்ட மணல் அனுமதிக்கான விண்ணப்பப்படிவம்
♦ காணி உறுதி பத்திரம், மணல் ஏற்றும் வாகன சாரதியின் அனுமதி பத்திரம், வாகன வரிப்பத்திரம் ஆகியவற்றின் போட்டோ பிரதி இணைத்தல் அவசியம்.
நாகர்கோவில் மணல் அனுமதி பெறுவதற்கான விண்ணப்பப்படிவம்
* நாகர்கோவில் மணல் அனுமதி பெற தேவையான ஆவணங்கள்
♦ மணல் தேவைக்கான கிராம அலுவலரின் சிபாரிசுடன் கடிதம்
♦ கிராம அலுவலரின் சிபாரிசுடன் பெற்றுக்கொள்ளப்பட்ட மணல் அனுமதிக்கான விண்ணப்பப்படிவம்
வணிக பெயர் பதிவு அனுமதி
* வணிக பெயர் பதிவு அனுமதி பெற தேவையான ஆவணங்கள்
♦ வியாபாரம் நடைபெறும் இடத்தின் காணி உறுதி நிழற்படபிரதி
♦ உரிமையாளரின் தேசிய அடையாள அட்டை நிழற்படபிரதி
♦ உறுதிச்சிட்டை மூலப்பிரதி
♦ பிரதேச சபையின் பதிவுச்சான்றிதழ்
♦ குறிப்பிட்ட சில வியாபார திணைக்களத்திற்கு தொழிற்திணைக்களத்தின் அனுமதி எடுத்தல் வேண்டும்
♦ உணவு சம்பந்தப்பட்ட விடுதிகளிற்கு சுகாதார திணைக்களத்தின் சான்றிதழ் எடுத்தல் வேண்டும்
♦ சுற்றுச்சூழல் அதிகார சபையின் அனுமதி எடுத்தல் வேண்டும்
























