சமுர்த்தி திட்டங்கள்
சர்வதேச மற்றும் உள்நாட்டு அனுபவங்களையும் முன் மாதிரிகளையும் ஒன்று சேர்த்து மூன்று வழிகளின் ஊடாக சமுர்த்தி வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது . அவையாவன சர்வதேச மற்றும் உள்நாட்டு அனுபவங்களையும் முன் மாதிரிகளையும் ஒன்று சேர்த்து மூன்று வழிகளின் ஊடாக சமுர்த்தி வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது . அவையாவன
* நலன்புரித்திட்டம்
* கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டம்
* வங்கித்திட்டம்
* நலன்புரித்திட்டம்
i . சமுர்த்தி நிவாரணம்
வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட பிரிவினருக்கு வழங்கப்படுகின்ற இந் நிவாரணமானது யாழ் மாவட்டத்தில் 2005 ஆம் ஆண்டில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது . பல நோக்கு கூட்டுறவு சங்கங்களில் பொருளாகவும் சமுர்த்தி வங்கி சங்கங்களில் பண முத்திரையாகவும் கட்டாய சேமிப்பு , சமூக பாதுகாப்பு வீட்டு லொத்தர் போன்ற அமைப்புக்களை கொண்ட நிவாரணமானது தற்போது பண முத்திரையாகவும் கட்டாய சேமிப்பு வீட்டு லொத்தர் சமூக பாதுகாப்பு என்ற அமைப்புக்களை கொண்டு விளங்குகின்றது . பிரதேச செயலக பிரிவிலே 30 சதவீதமானோர் சமுர்த்தி நிவாரணத்தை தற்போது பெற்று வருகின்றனர் .
சமுர்த்தி முத்திரையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள்
|
சமுர்த்தி முத்திரையின் பெறுமதி
|
பணமுத்திரை |
கட்டாய சேமிப்பு |
வீட்டு லொத்தர் |
சமூக பாதுகாப்பு |
| 1500/= |
1250/= |
100/= |
50/= |
100/= |
| 2500/= |
2150/= |
200/= |
50/= |
100/= |
| 3500/= |
3050/= |
300/= |
50/= |
100/= |
ii சிப்தொற புலமைப்பரிசில் திட்டம்
சமுர்த்தி முத்திரை பெறுகின்ற வறிய குடும்பங்களைச் சேர்ந்த க.பொ.த (சா/த )பரீட்சையில் சித்தியடைந்த உயர் கல்வியை தொடரும் மாணவர்களிற்கு மாதாந்தம் பத்தாயிரம் ரூபா இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும் .
* கிராம அபிவிருத்தி வேலைத்திட்டம்
கிராமத்தின் வறுமைப்பட்ட மக்கள் பிரிவினருக்கு பயன் தரக்கூடியதும் ஒரு வருட காலத்திற்குள் செய்து முடிக்க கூடியதுமான கருத்திட்டங்கள் இந் நிகழ்ச்சித்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன .
i பௌதீக அபிவிருத்தி
ii கிராமிய மக்களின் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக
iii ஆன்மீக அபிவிருத்தி
* வங்கித்திட்டம்
சமுர்த்தி வேலைத்திட்டத்தின் பிரதான அங்கமாக குறுநிதியியல் உள்ளடக்கப்பட்டு அதற்காக தனிப்பட்ட ஸ்தாபன கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது . சமுர்த்தி வங்கி சங்கத்தினூடாக குறைந்த வருமானம் பெறுவோருக்கு கீழ் குரிப்பியாப்படுகின்ற விடயங்கள் கிடைக்கப்பெறுகின்றன.
i வறியோருக்கு சந்தர்ப்பம் வழங்குதல்
ii வலுவூட்டுதல்
iii பாதுகாப்புத்தன்மை
சமுர்த்தி வங்கி சங்கத்தின் பிரதான பணிகள்
i வைப்புக்களை ஏற்றல்
ii கடன்களை விடுவித்தல்
iii காப்புறுதி
சமுர்த்தி வங்கி சங்கத்திலுள்ள வைப்பு கணக்குகளின் வகைகள்
i அங்கத்தவர் வைப்பு
ii பங்குக்கணக்கு
iii குழு வைப்பு
iv அங்கத்தவர் அல்லாதோர்
v திரியமாதா வைப்பு
vi சிறுவர் வைப்பு
vii சிசுரக்க வைப்பு
viii கட்டாய சேமிப்பு
கடன் வழங்குதல்
புதிய வருமானமீட்டும் கருத்திட்டங்களை ஆரம்பிக்கவோ , ஏற்கனவே உள்ள கருத்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கோ தேவையான நிதி வசதிகளை வழங்குவதற்கு கடன்திட்டங்கள் பல அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கடனின் வகைகள்
i பயிர்ச்செய்கை கடன்
ii மீன்பிடிக்கடன்
iii சுயதொழில் கடன்
iv நுகர்வுக்கடன்
v இடர் கடன்
vi வீட்டுக்கடன்
vii ரட்டவிரு கடன்
viii திவிநெகும இதர கடன்
viii வாழ்வாதார அபிவிருத்தி கடன்
viii மகுட அபிவிருத்தி கடன்
மேற்குறிப்பிட்ட திட்டங்களுடன் கீழ்வரும் திட்டங்களும் சமுர்த்தியால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
* சமூக அபிவிருத்தி
இலக்காக கொள்ளப்பட்டவர்களின் சமூக ரீதியான பிரச்சனைகளுக்கு நிரந்தரமான தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இடம் பெறுவது
i போதை நிவாரண வேலைத்திட்டம்
ii சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுக்கும் வேலைத்திட்டம்
iii தற்கொலை முயற்சியை தடுக்கும் வேலைத்திட்டம்
iv சர்வதேச தினங்களுடன் இணைந்ததான திட்டம்
v சர்வதேச மகளிர் தினம்
vi சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினம்
vii சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம்
viii சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்
ix சர்வதேச எழுத்தறிவு தினம்
* பல்வேறு நலன்புரி வேலைத்திட்டங்கள்
i அங்கவீனமுற்ற படைவீரர் நலன்புரி
ii முதியோர் நலன்புரி
iii திரிய பியச வீடமைப்புத்திட்டம்
* சிறுவர் கழக வேலைத்திட்டம்
சர்வதேச தினங்கள் கலாசார வைபவங்கள் சமய வைபவங்களை ஒட்டி பல்வேறு மேம்பாட்டு மற்றும் தேசிய வைபவங்களை ஒழுங்கு செய்வதும் உதவிகளை வழங்குவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது .
* திவிநெகும
திவிநெகும சமுதாய அடிப்படையிலான வங்கிகள் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காகவும் முதலீட்டு வாய்ப்புக்களை அபிவிருத்தி செய்வதற்காகவும் உற்பத்தி வாய்ப்பினை அபிவிருத்தி செய்வதற்காகவும் கடன் வசதிகளை வழங்குவதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது .