பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் வேலணை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய நடமாடும் சேவை யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் வேலணை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய நடமாடும் சேவையானது வேலணை பிரதேச செயலாளர் திரு.தனபாலசிங்கம் அகிலன் தலைமையில் இன்றைய தினம் (18.11.2025) நயினாதீவு அமுதசுரபி மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.கைலாசபிள்ளை சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, ஆகியோரின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமாகியது.

இந் நடமாடும் சேவையில் ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் (தேசிய அடையாள அட்டை), ஓய்வூதியம் தொடர்பான சேவைகள், பிறப்பு, இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள், மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகள், பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகள், பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள், திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்கள் (NVQ), சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள், வாகன புகைப் பரிசோதனை, காணி தொடர்பான சேவைகள், மருத்துவ முகாம் போன்ற சேவைகள் வழங்கப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு கண்புரை பரிசோதனை இடம்பெற்ற இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்குதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன், தென்னங்கன்றுகள், மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் என்பன இலவசமாக வழங்கப்பட்டதுடன், பொதுமக்களுக்கான போதை பொருளால் வரும் பாதிப்பும் சமூக பிறழ்வுகளுக்குமான விழிப்புணர்வு தெருநாடகம் "மன வலி" யாழ் பாடி கலைக்கூட கலைஞர்களால் நடாத்தப்பட்டது.

பொதுமக்கள் அனைவருக்கும் இலைக்கஞ்சியும் வழங்கப்பட்டது. 591 பொதுமக்கள் 1184 சேவைகளைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவ் நடமாடும் சேவையில் வேலணை உதவி பிரதேச செயலாளர் திரு. கணேசமூர்த்தி பாா்த்தீபன் மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள வந்த பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

1 2

1 2

News & Events

10
ஆக2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
பிப்2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
பிப்2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
பிப்2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top