பிரதேச விவசாய குழுக் கூட்டம், பிரதேச செயலாளர் திரு. த. அகிலன் அவர்களின் தலைமையில் நேற்று ( 24.09.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில், பெரும்போகம், கட்டாக்காலி கால்நடைகள், பாதீனியம், விவசாயக் கடன் மற்றும் விவசாயக் காப்பீடு போன்ற விவசாயம் சார்ந்த பல முக்கிய விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், 2025 ஆம் ஆண்டிற்கான திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டன. இந்தக் கூட்டத்தில், கமநல சேவை நிலையம், பிரதேச சபை, இலங்கை வங்கி, கடற்றொழில் திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், காப்புறுதி சபை, கால்நடை வைத்திய பணிமனை ஆகிய திணைக்களங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர். மேலும், திட்டமிடல் பணிப்பாளர், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகத்திற்குட்பட்ட விவசாய சம்மேளன உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் பங்கேற்றனர்.

1 2

1 2

விளையாட்டுத்துறைத் திணைக்களத்தின் நிதி அனுசரணையுடன் வேலணை பிரதேச செயலகம் நடாத்திய புங்குடுதீவு மத்திய கல்லூரி மாணவர்களுக்கான உதைபந்தாட்ட பயிற்சி முகாம் கடந்த திங்கட்கிழமை மற்றும் செவ்வாய் கிழமை(22.09.2025 - 23.09.2025) ஆகிய இரு தினங்களும் புங்குடுதீவு மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

1 2

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின்  PSDG 2025 நிதி ஒதுக்கீட்டில் வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் கரையோர சுற்றுச் சூழல் பாதுகாப்பு நடவடிக்கையாக 500 கண்டல் தாவரங்களை நாட்டும் வேலைத்திட்டத்தில் முதற் கட்டமாக 300 தாவர நாற்றுக்கள் மண்டைதீவு சந்திக்கு அருகில் இன்றைய தினம் (19.09.2025) நாட்டப்பட்டதுடன் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கண்டல் தாவர முக்கியத்துவம் தொடர்பில் விழிப்புணர்வும் செய்யப்பட்டது.

இவ் வேலைத்திட்டத்தில் வேலணை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வேலணை பிரதேச சபை உத்தியோகத்தர், மாவட்ட செயலக சுற்றச் சூழல் உத்தியோத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்க மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், மகளிர் விவகாரக்குழு அங்கத்தவர்கள், கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள், பிரதேச மட்ட மாற்று திறனாளிகள் அமைப்பு பிரதிநிதிகள், கடற்படையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025 09 19 at 9.27.47 AMWhatsApp Image 2025 09 19 at 9.28.27 AMWhatsApp Image 2025 09 19 at 9.28.27 AM 1 2

வட மாகாண சமூக சேவை திணைக்களத்தின் PSDG திட்ட நலிவுற்ற குடும்பத்திலுள்ள போசாக்கு குறைபாடுள்ள விசேட தேவையுடைய 10 சிறுவர்களுக்கான 5 ம் கட்ட போசாக்கு உலர் உணவு பொதிகளை பிரதேச செயலாளர் திரு.த.அகிலன் அவர்கள் இன்றைய தினம் வழங்கி வைத்தார்.

551201556 1963650861197650 5185514994501015712 n552820472 1963650664531003 6737281847688811720 n

 

WhatsApp Image 2025 09 17 at 1.01.30 PM

பிரதேச மட்ட டெங்கு குழுக் கூட்டமானது பிரதேச செயலாளர் திரு.த.அகிலன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (17.09.2025) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

News & Events

10
Aug2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
Feb2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
Feb2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
Feb2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top