இன்று ( 22.11.2025) கண்டல் தாவரங்களின் நடுகை காலை 7.00 மணி தொடக்கம் 11மணி வரை மண்டைதீவு பிரதான வீதியில் இருந்து வழிப் பிள்ளையார் கோயில் வரை 250 கண்டல் தாவர நடுகை இடம் பெற்றது. இந் நிகழ்ச்சித் திட்டத்தில் உதவி பிரதேச செயலாளர் திரு.க.பார்த்தீபன், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் யேசுதாஸ் (RDO), கரையோர பாதுகாப்பு உத்தியோகத்தர் துவாரகன், சுற்றுச்சூழல் உத்தியோகத்தர் தினேஸ்கௌரி (EO), கிராம உத்தியோகத்தர்கள் வாகீசன், கோகுலரூபன் மற்றும் கடற் தொழிலாளர்கள் ஆகியோர் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது .

1 2

இன்று (21.11.2025)
வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 12 மாணவர்களுக்கு கற்றலுக்கான ஊக்குவிப்பு தொகை சிறுவர் அபிவிருத்தி நிலையத்தினால் நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது.இதில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், சமூதாயம் சார் சீர்திருத்த உத்தியோகத்தர், சிறுவர் அபிவிருத்திநிலைய உத்தியோகத்தர்கள் ,பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

1 2

யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் வேலணை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய நடமாடும் சேவை யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் வேலணை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய நடமாடும் சேவையானது வேலணை பிரதேச செயலாளர் திரு.தனபாலசிங்கம் அகிலன் தலைமையில் இன்றைய தினம் (18.11.2025) நயினாதீவு அமுதசுரபி மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.கைலாசபிள்ளை சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, ஆகியோரின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமாகியது.

இந் நடமாடும் சேவையில் ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள் (தேசிய அடையாள அட்டை), ஓய்வூதியம் தொடர்பான சேவைகள், பிறப்பு, இறப்பு மற்றும் உத்தேச வயது சான்றிதழ்கள் தொடர்பான சேவைகள், மோட்டார் வாகன பதிவு மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பான சேவைகள், பிரதேச சபைகளால் வழங்கப்படும் சேவைகள், பொலிஸ் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், மனிதவள அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழில் வழிகாட்டல்கள், திறன் அபிவிருத்தி தொடர்பான சேவைகள் மற்றும் தொழிற்கல்வி வழிகாட்டல்கள் (NVQ), சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகள், முதியோர் தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் சேவைகள், வாகன புகைப் பரிசோதனை, காணி தொடர்பான சேவைகள், மருத்துவ முகாம் போன்ற சேவைகள் வழங்கப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு கண்புரை பரிசோதனை இடம்பெற்ற இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்குதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதுடன், தென்னங்கன்றுகள், மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் என்பன இலவசமாக வழங்கப்பட்டதுடன், பொதுமக்களுக்கான போதை பொருளால் வரும் பாதிப்பும் சமூக பிறழ்வுகளுக்குமான விழிப்புணர்வு தெருநாடகம் "மன வலி" யாழ் பாடி கலைக்கூட கலைஞர்களால் நடாத்தப்பட்டது.

மர நடுகை வாரத்தினை முன்னிட்டு புங்குடுதீவு J/26 கண்ணகை அம்மன் கோயில் வரவேற்பு பகுதியில் 200 புங்கைமர நடுகை இடம்பெறது.

1 2

News & Events

10
Aug2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
Feb2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
Feb2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
Feb2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top