News
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் 28.01.2026 ஆம் திகதி அம்பிகைநகர் ஸ்ரீமகேஸ்வரி மைதானத்தில் நடைபெற்றது. இத்தேர்வுகளுக்கான மைதான வசதிகளை ஏற்பாடு செய்து தந்த அம்பிகைநகர் ஸ்ரீமகேஸ்வரி விளையாட்டு கழக நிர்வாகத்திற்கு நன்றிகள்

வேலணை சமுர்த்தி பிரதேச அமைப்பின் 2026 ஆம் ஆண்டிற்கான பொதுக்கூட்டமும் உறுப்பினர் தெரிவும் 2026.01.29 காலை வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச அமைப்பின் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு உதவி பிரதேச செயலாளர், தலைமைப்பீட முகாமையாளர், வங்கிச் சங்க முகாமையாளர், வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

வேலணை பிரதேச செயலகமும் வேலணை பிரதேச செயலக மாற்றாற்றலுடையோர் சுய உதவிக்குழுவும் இணைந்து நடத்திய சர்வதேச மாற்றாற்றலுடையோர் தினம் திருமதி. பாமா மோகனமுரளி உதவி பிரதேச செயலர் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக பழைய மாநாட்டு மண்டபத்தில் (13.01.2026) நடைபெற்றது. திரு. த.அகிலன் பிரதேச செயலர், திரு. அ.ஜெயக்குமார் பொது சுகாதார வைத்திய அதிகாரி,திரு .ச. ஜீவிதன் கணக்காளர்,திரு.கி.மணிராஜ் தலைவர்(CBR), திருமதி.அ.அனுசா -சமூக சேவை உத்தியோகத்தர், திரு.சசிகாந் - Fairmed நிறுவன உத்தியோகத்தர், திருமதி.றெ. சுவர்னா டலிமா சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் மாற்றாற்றலுடையோர் ஆகியோர் கலந்து கொண்டனர்

தேசிய உற்பத்தித்திறன் செயலகம் மற்றும் ஆசிய உற்பத்தித்திறன் நிறுவனமும் இணைந்து நடாத்திய Pro youth (AI Vedio clip creation) போட்டியில்“இளமையே எமது வாழ்வின் உற்பத்தித்திறன்“ என்ற கருப்பொருளின் கீழ் எமது வேலணை பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த பாலேந்திரன் சிலம்பரசி என்பவர் கலந்து கொண்டு சான்றிதழைப் பெற்றுக் கொண்டார்.

எமது பிரதேச செயலகத்தில் கடமையாற்றி சென்ற வருடம் விடைபெற்றுச் சென்ற பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு பிரதேச செயலாளர் திரு.த.அகிலன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 10.01.2026 அன்று நடைபெற்றது.

























