News
இன்று (08.11.2025) கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வேலணை பிரதேச செயலகத்தால் நடாத்தப்பட்ட பிரதேச மட்ட கலை இலக்கிய பரிசளிப்பு விழா உதவி பிரதேச செயலாளர் திரு.க.பார்த்தீபன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதேச செயலாளர் திரு.த.அகிலன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதோடு மாணவர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

(04.11.2025) உதவிப்பிரதேச செயலாளர் திரு.க.பார்த்தீபன் அவர்களின் தலைமையில் வேலணைப் பிரதேச செயலர் பிரிவின் மூத்த பிரஜையான 104 வயதினை அடைந்த சின்னத்துரை தங்கம்மாவினையும் 103 வயதினையடைந்த ஐயாத்துரை சிவக்கொழுந்து ஆகியோருக்கான கௌரவிப்பு நிகழ்வானது J/36 நயினாதீவு தெற்கு கிராமத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், எமது பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர், முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர், அனர்த்த நிவாரண சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்,ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

சரவணை மக்கள் ஒன்றியத்தினால் (கனடா) தையல் பயிற்சி நெறி வழங்கப்பட்டது. இவ் பயிற்சி நெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் (05.11.2025) நடைபெற்றது. இன் நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், முன்ன்ள் அரசாங்க அதிபர் திரு.அ. சிவபாலசுந்தரன், பிரதேச செயலாளர் திரு.த.அகிலன், பிரதேச சபை உறுப்பினர்,கிராம அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சமுர்த்தி ஹரசர திட்டம் -2024 வங்கிகளை தரப்படுத்தும் திட்டத்தில் யாழ்.மாவட்டத்தில் 3 ஆம் இடத்தினை பெற்ற வேலணை சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்களுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.சிவகரன் அவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


























