1 2

எமது பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட J/07 - மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதான கட்டுமாண பணிகளை 01.09.2025ஆம் திகதி ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க.
ஜனாதிபதி அவர்கள் உரையாற்றுகையில் எதிர்வரும் மூன்று வருடங்களில் இங்கு சர்வதேச போட்டிகள் இடம்பெறும் எனவும் இந்த ஆண்டு இறுதிக்குள், யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதலாவது போட்டி நடைபெறும் எனவும், விளையாட்டில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எடுத்த இந்த நடவடிக்கைக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் ஷாமி சில்வா, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ச.ஶ்ரீபவானந்தராஜா வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன், பிரதேச செயலாளர் தீவகம் தெற்கு,வேலணை த.அகிலன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

Akilan

தீவகம் தெற்கு, வேலணை பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக திரு.தனபாலசிங்கம் அகிலன் அவர்கள் 27.08.2025 ஆம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இன்றைய தினம் (15.08.2025) பிரதேச மட்ட சிறுவர் சபா கலந்துரையாடல் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் மாணவர்களின் உரிமை, பாதுகாப்பு, ஒழுக்கம், தேவைப்பாடு, ஒழுங்கற்ற வரவு , இடைவிலகல், போதை தடுப்பு, மகிழ்வூட்டும் நிகழ்வுகள் மற்றும் சமுதாயம் சார் சீர்திருத்தங்கள் பற்றியும்  கலந்துரையாடப்பட்டது.

  நிகழ்வில் மாணவர்களின் உரிமை, பாதுகாப்பு, ஒழுக்கம், தேவைப்பாடு, ஒழுங்கற்ற வரவு , இடைவிலகல், போதை தடுப்பு, மகிழ்வூட்டும் நிகழ்வுகள் மற்றும் சமுதாயம் சார் சீர்திருத்தங்கள் பற்றியும்  கலந்துரையாடப்பட்டது. இந் நிகழ்வில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் போதைத்தடுப்பு உத்தியோகத்தர், சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர்,மாணவர்கள்,பெற்றோர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் நல்லூர் கந்தசாமி ஆலய உற்சவ காலத்தை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை (16.08.2025) நடைபெற்ற தெய்வீக திருக்கூட்ட நிகழ்வில் வேலணை பிரதேச அறநெறிப் பாடசாலைகளின் கலை நிகழ்வுகள் நடைபெற்றது. நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மதிப்பிற்குரிய திரு.கயிலாயபிள்ளை சிவகரன் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

1 2

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் நல்லூர் கந்தசாமி ஆலய உற்சவ காலத்தை முன்னிட்டு நடாத்தப்படும் தெய்வீக திருக்கூட்ட நிகழ்வில் நாளையதினம் 16.08.2025 (சனிக்கிழமை) வேலணை பிரதேச அறநெறிப் பாடசாலைகளின் கலை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. நிகழ்வில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மதிப்பிற்குரிய திரு.கயிலாயபிள்ளை சிவகரன் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
 
 
 

News & Events

10
Aug2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
Feb2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
Feb2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
Feb2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top