News
Clean Sri Lanka தேசிய நிகழ்ச்சி திட்டத்தில் வேலணை பிரதேச செயலாளர் திரு.க.சிவகரன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (23.02.2025) “அழகான கடற்கரை ஓர் கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்” எனும் தொனிப்பொருளில் சாட்டி கடற்கரை பகுதி பிரதேச செயலகம் தீவகம் தெற்கு வேலணையின் ஒருங்கிணைப்பின் கீழ் சுத்தம் செய்யப்பட்டது. நிழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், வேலணை பிரதேச சபை செயலாளர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், இலங்கை கடற்படையினர், பொது சுகாதார பரிசோதகர், பிரதேசத்தின் பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.




தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட 5S தர சான்றுப்படுத்தல் போட்டித்தொடரில் புங்குடுதீவு சமுர்த்தி வங்கி சான்றிதழினை பெற்றுக்கொண்டமைக்காக வாழ்த்துக்கள்...

2025 ஆம் ஆண்டிற்கான அலுவலக கடமைச் செயற்பாடுகள் பிரதேச செயலாளர் திரு.க.சிவகரன் தலைமையில் தேசிய கொடியோற்றல் மற்றும் தேசிய கீதத்துடன் ஆரம்பமாகி Clean Sri Lanka தேசிய நிகழ்ச்சி திட்டத்துடன் இணைந்ததாக சத்தியப்பிரமாணம் செய்யப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற Clean Sri Lanka நிகழ்ச்சி திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இலத்திரனியல் அலைவரிசை மூலம் நேரடியாக எமது அலுவலர்கள் பார்வையிடும் வண்ணம் ஒலி, ஒளிபரப்பு செய்யப்பட்டது. மற்றும் Clean Sri Lanka தேசிய நிகழ்ச்சி திட்டத்தினை பார்வையிடுவதற்கு ஜனாதிபதி செயலகத்தால் https://cleansrilanka.gov.lk எனும் இணையதளம் இன்றைய தினம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது.




குறைந்த வருமானம் பெறும் மக்களை வலுவூட்டல் வேலைத்திட்டம் (2025-2027) தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளித்தல் 09.01.2025 ஆம் திகதி வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு.க.சிவகரன் தலைமையில் நடைபெற்றது.இந் நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் இதில் பல்வேறு திணைக்களங்களினுடைய உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.


































