News
76வது சுதந்திர தினம்...
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று எமது அலுவலகத்தில் நடைபெற்றது. எமது பிரதேச செயலாளா் தேசியக் கொடி ஏற்றி வைத்து சுதந்திரதின சிறப்புரை ஆற்றினார். எமது நாட்டின் சுபீட்சத்தினை நோக்கிய பயணத்தில் 76வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை எமது அலுவலகம் சாா்பாக உங்களுக்கு தெரிவித்து கொள்கின்றோம்.
76 ஆவது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு 01.02.2024 தொடக்கம் 07.02.2024 ஆம் திகதி வரை நடாத்தப்படும் மரநடுகை வாரம் மற்றும் சிரமதான நிகழ்வுகள் தொடர்பாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இன்றைய தினம் எமது அலுவலக வளாகத்தில் எமது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் தலைமையில் மர நடுகை நிகழ்வானது நடைபெற்றது.
இன்றய இந்த நிகழ்வில் மருத்துவ குணமுள்ள மூலிகை மரங்கள் மற்றும் பழ மரக் கன்றுகள் என்பன நாட்டப்பட்டன. இன்றய இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், ஏனைய பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு மரக் கன்றுகளை நாட்டி வைத்தனர்.







நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்
அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றான புவனேஸ்வரிபீடம் நயினா தீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் இன்று (24.01.2024) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றான புவனேஸ்வரிபீடம் நயினா தீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் இன்று (24.01.2024) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் கூட்டம் வருகைதந்திருந்தனர். யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் மற்றும் வேலணை பிரதேச செயலாளர் திரு.கயிலாசபிள்ளை சிவகரன் உள்ளிட்டோரும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






இன்று (02.01.2024) எமது பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இடம்பெற்றது. கௌரவ கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமாகிய கே.என். டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது.
இவ் கூட்டத்தில் பிரதேச செயலாளர் கைலாசப்பிள்ளை சிவகரன், உதவி பிரதேச செயலாளர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதிகளும் திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களின் அதிகாரிகளும், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அலுவர்களும் மற்றும் கிராம மட்டத்தில் இயங்கும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றில் மிக அவசியமாக நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து கௌரவ அமைச்சர் அவர்கள் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டார். அத்துடன் பொது மக்களின் விசேட கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்தும் கௌரவ அமைச்சர் அவர்கள் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டார்.





தைப் பொங்கல் விழா -2024
தைப் பொங்கல் விழா -2024எமது பிரதேச செயலகத்தில் தை பொங்கல் விழாவானது உத்தியோகத்தர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. தைப் பொங்கலினை முன்னிட்டு உத்தியோகத்தர்களுக்கான தேங்காய் துருவுதல்இ யானைக்கு கண் வைத்தல் உறி அடித்தல் பாட்டுக்குப் பாட்டு போட்டிகள் என்பன சிறப்பாக இடம்பெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டது.
































