எமது பிரதேச செயலகத்தில் உத்தியோகத்தர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்த ஓன்றுகூடல் நிகழ்வானது 2024.01.06 (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நலன்புரிச்சங்கத் தலைவர் கு.நிர்மலன் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கை.சிவகரன் (பிரதேச செயலாளர்) கலந்து கொண்டார். உத்தியோகத்தர் நிகழ்வுகள்இ மதியபோசனம்இ இசை நிகழ்வுகள் என்பனவற்றோடு மிகவும் சிறப்பான முறையில் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வானது இடம்பெற்றது.

1 2

3 4

5 6

7 8

9 10

11 12

13 14

2024.01.01 - புதிய ஆண்டினை வரவேற்றல்

இன்றைய தினம் 2024/01/01 புதிய ஆண்டினை வரவேற்கும் முகமாக பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டதோடு அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும் என சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளப்பட்டது. பின்னர் இலங்கையின் தேசிய உணவான பாற்சோறும் வழங்கப்பட்டு சம்பிரதாய பூர்வமாக அலுவலக செயற்பாடுகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

1

2 3

4 5 8 6

 

ஒளி விழா – 2023 வேலணை பிரதேச செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் 2023 ஆம் ஆண்டிற்கான இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடிடும் ஒளி விழா நிகழ்வானதுஇ பிரதேச செயலாளர் கை.சிவகரன் அவர்களின் தலைமையில்இ வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் (27.12.2023) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.

மேலதிக புகைப்படங்களை காண்பதற்கு கீழ் உள்ள link இனை Click செய்யவும்http://tinyurl.com/2s3syc5j.

1 2

3 4

5 6

7 8

 

சேவைநலன் பாராட்டு விழா - 2023

எமது பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் சேவைநலன் பாராட்டு விழா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் எமது பிரதேச செயலகத்தில் இருந்து மாற்றலாகி சென்ற உத்தியோகத்தர்களுக்கான சேவை நலன் பாராட்டு மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டது.
சேவை நலன் பாராட்டு விழா - 2023 புகைப்படங்களின் தொகுப்பினை காண கீழ் உள்ள link இனை Click செய்யவும்.

1

6

2 3

4 6

7 8

9 10

11 12

13 14

15 16

யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ண விளையாட்டுப்போட்டி நிகழ்வு மாவட்ட செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளரும், நலன்புரி சங்க தலைவருமான திரு.இ.சுரேந்திரநாதன் தலைமையில் நேற்றைய தினம் (29.11.2023) பிற்பகல் 01மணிக்கு வேலணை துறையூர் ஐயனார் கழக விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக  மாவட்ட அரசாங்க அதிபரும், நலன்புரி சங்க போசகருமான திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன், சிறப்பு விருந்தினர்களாக மேலதிக அரசாங்க அதிபரும் உபபோசகருமான திரு.மருதலிங்கம் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.கனகராஜா ஸ்ரீமோகனன் மற்றும் கௌரவ விருந்தினராக வேலணை பிரதேச செயலாளர் திரு.கயிலாசபிள்ளை சிவகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகம் உட்பட பதினைந்து பிரதேச செயலகங்களுக்கும் இடையில் நடைபெற்ற அரச அதிபர் வெற்றிக் கிண்ண விளையாட்டுப்போட்டியில் பருத்தித்துறை பிரதேச செயலகம் முதலாம் இடத்தினையும், தெல்லிப்பழை பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினையும், கரவெட்டி பிரதேச செயலகம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளன.

அரச அதிபர் வெற்றி கிண்ணம் -2023 இறுதி நாளில் எமது உத்தியோகத்தர்கள், பங்குபற்றிய மற்றும் வெற்றி பெற்ற அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்....

இதில், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேசசெயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்

1 2 3

4 5 6

7 8 9

10 11 12

13 14 15

16 17 18

19 20

 

நிகழ்வின் புகைப்படங்களின் தொகுப்பினைக் காண கீழே உள்ள Link இனை Click செய்யவும்

https://drive.google.com/.../1Xa6vwAP2QAP5zR0XQyPr4...

 

News & Events

10
Aug2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
Feb2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
Feb2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
Feb2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top