News & Events

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive

போதை தடுப்பின் ஊடாக மகிழ்ச்சியான குடும்பம் வேலைத்திட்டம் - 2019

போதை தடுப்பின் ஊடாக மகிழ்ச்சியான குடும்பம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் தலைமையில் 2019.10.17ம் திகதி காலை 9.30 - பி.ப 4.00 மணி வரை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் சு.சதீஷ்காந்த் (உளவளத்துணை உத்தியோகத்தர்), ர.ரவிராஜ் (சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்) வளவாளர்களாக கலந்து கொண்டனர். போதை ஒழிப்பு, போதையிலிருந்து மீளல், உளரீதியான சந்தோசமான குடும்பம் போன்ற விடயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இந் நிகழ்வில் 105 சமுர்த்தி பயனாளிகள் கலந்து கொண்டனர்.

         20191017 101740          20191017 101830                                                    

                                                                   20191017 124101

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive

பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான ICT பயிற்சி நெறி

எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான Training of officers in Handling ICT Equipments 2019.10.14,15ம் திகதிகளிலும் Training of officers on the Software Application Needed for Office Use 2019.10.17,18ம் திகதிகளிலும் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப்  பயிற்சி நெறிகளுக்கான வளவாளராக சு.கரிகரகணபதி (சிரேஸ்ட விரிவுரையாளர் , உயர் தொழினுட்ப கல்லூரி, யாழ்ப்பாணம்) அவர்கள் கலந்து கொண்டார். 

                        20191015 092750      20191015 110644

 

                         20191015 110649     20191015 112426

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive

சர்வதேச சிறுவர் முதியோர் தின விழா - 2019

2019ம் ஆண்டுக்கான வேலணை பிரதேச செயலகத்தின் சர்வதேச சிறுவர் முதியோர் தின விழா திரு. அம்பலவாணர் சோதிநாதன் (பிரதேச செயலர்,வேலணை) அவர்களின் தலைமையில் 2019.10.10ம் திகதி காலை 10.00 மணிக்கு வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக DR.N.முகுந்தன் (சுகாதார வைத்திய அதிகாரி, வேலணை) அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு. T.கனகராஜா (மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர், யாழ்ப்பாணம்) அவர்களும்  கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் சிறுவர், முதியோர், மாற்றாற்றலுடையோரின் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் இவர்களுக்காக நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டது.

 

              IMG 5b54e0bcfdda52736a5f85e1208038a7 V     IMG 53d88b41e8628d89e3fae2004662c2de V

 

             IMG aaa9e525acbf3995cd118381474c0099 V      IMG 763516e83c8b3bfbc7ab8ac2b8557721 V

 

             IMG 950b9d5de86df5020f6378129e3fb7a9 V      IMG ca334293c6db92d358b5384039619d1c V

 

             IMG f9ffd81c7def827ecabf10435c87e7cd V      IMG ba94bd25b319e2ec2ffad77c608ee99a V

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive

தொழில் தேடுவோருக்கான விழிப்பூட்டும் நிகழ்வு

எமது பிரதேச செயலகத்தின் மனிதவள அபிவிருத்தி பிரிவினால் ஒழுங்கமைக்கப்பட்ட தொழில் தேடுவோருக்கான விழிப்பூட்டும் நிகழ்வு 2019.10.15ம் திகதி காலை 9.30 மணிக்கு செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் தொழில் தேடுவோருக்கான உளவியல் சோதனை இடம்பெற்றதுடன் தொழில் வழிகாட்டல் ஆலோசகரால் ஆலோசனை வழங்கப்பட்டது. இவ் விழிப்புணர்வு நிகழ்வில் எமது செயலக பிரிவிற்குட்பட்ட  43 தொழில் தேடுவோர் கலந்து கொண்டனர்.

2a689953ef9cd49d030f63131b9d9934 M

 

User Rating: 0 / 5

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive

வாணி விழா - 2019

எமது பிரதேச செயலகத்தின் 2019ம் ஆண்டுக்கான வாணி விழா எமது செயலக நலன்புரி சங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு 2019.10.08ம் திகதி செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. நவராத்திரி பூசையைத் தொடர்ந்து பாடல், கவிதை, பட்டிமன்றம் என பல்வேறு கலை நிகழ்வுகளும் இவ் விழாவில் இடம்பெற்றது.

 

20191008 120642 1 copy

News & Events

10
අගෝ2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
පෙබ2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
පෙබ2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
පෙබ2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top