News & Events

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
எழுத்தாளர் திரு மார்க்கண்டு இளஞ்செழியன் எழுதிய "விடியாத இரவுகள்" சிறுகதை நூல் வேலணைப் பிரதேச செயலாளர் திரு கயிலாசபிள்ளை சிவகரன் அவர்களால் வேலணைப் பிரதேச செயலகத்தில் 2021.12.01ம் திகதி வெளியிட்டு வைக்கப்பட்டது.
பிற்பகல் 2.30 மணியளவில் மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகி மாணவியின் வரவேற்பு நடனத்துடன் விருந்தினர்களை வரவேற்றதனைத் தொடர்ந்து வரவேற்பு உரையினை திருமதி பிரதீபன் லெற்றிசியாராணி அவர்கள் நிகழ்த்தினார்.
தொடர்ந்து நிகழ்வினை தலைமைதாங்கிய திரு சுப்பிரமணியம் கஜேந்திரகுமார் அவர்கள் தலைமை உரையில் நீண்ட காலக் கனவு ஒன்று நிறைவேறியதையும் அதற்குத் துணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவிப்பதாகவும் தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
தொடர்ந்து நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்த வேலணைப் பிரதேச செயலாளர் திரு கயிலாசபிள்ளை சிவகரன் அவர்கள் தமது உரையில் இலை மறை காயாக எமது பிரதேசத்தில் இருக்கும் எழுத்தாளர்களுக்கு கரங்கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், வேலணைக் கலாசாரப் பேரவை ஊடாக தொடந்து இவ்வாறான வெளியீடுகள் முன்னெடுக்கப்பட இருப்பதையும் குறிப்பிட்டதோடு எழுத்தாளருக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடந்து சிறப்பு விருந்தினர் உரையில் ஆசிரியர் திரு அகஷ்ரீன் யஷ்ரீன் அவர்கள் ஏழ்மைதான் உன்னத படைப்பாளர்களை, எழுத்தாளர்களை உருவாக்குகிறது என்ற ரீதியில் அழகான கதை ஒன்றின் மூலம் தனது கருத்தை முன்வைத்தார்.
தொடர்ந்து விருந்தினர்கள் சபையோர் முன்னிலையில் "விடியாத இரவுகள்" சிறுகதை நூல் வேலணைப் பிரதேச செயலாளர் திரு கயிலாசபிள்ளை சிவகரன் அவர்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது.
முதற்பிரதி, சிறப்புப்பிரதிகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து ஆசிரியர் திரு பாலசுந்தரம் ரஜிந்தன் அவர்களால் விடியாத இரவுகள்" சிறுகதை நூலுக்கான மதிப்பீட்டுரை நிகழ்த்தப்பட்டது அவ்வுரையில் குறிப்பாக ஈழத்துச் சிறுகதை வளர்ச்சிப்போக்கு முதல் வேலணையின் இலக்கிய ஆளுமைகள் ஈறாக தனது கன்னி நூலின் மூலமான நூலாசிரியரின் இலக்கியப் பிரவேசம் குறித்தும் நூலின் நிறைவான பக்கங்களையும் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய பக்கங்களையும் சுட்டிக்காட்டியதோடு இச் சிறுகதை நூல் கொண்டிருக்கும் சிறப்பான பண்புகளையும் பாரட்டிக் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து நிகழ்வைச் சிறப்பாக ஒழுங்கமைத்திருந்த வேலணைப் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் திருமதி ம.மேர்சி சுஜந்தினி அவர்கள் இன்றைய நிகழ்வு சிறப்புற நடைபெற பங்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு நூலாசிரியரையும் பாராட்டி தமது கருத்துக்களை முன்னவைத்தார்.
இறுதியாக நூலாசிரியர் திரு மார்க்கண்டு இளஞ்செழியன் அவர்கள் தமது ஏற்புரையில் வறுமையோடும் தமது எழுத்துப்பணியைத் தொடர்ந்தமை பற்றியும் அர்ப்ணிப்போடான கதைளை எழுதி முடித்தமை பற்றிய நினைவுகளையும் முன்வைத்ததோடு பத்திரிகை, மற்றும் துணையாக இருந்தவர்களையும் குறிப்பிட்டு நன்றிகளைத் தெரிவித்திருந்தார்.
நிறைவாக சபையோர்களின் ஆசியும் வாழ்த்துக்களும் நூலாசிரியரை சூழ்ந்து கொள்ள நிகழ்வு இனிதே நிறைவெய்தியது.
 
262119863 956575038571909 5505454843532454346 n 263563348 956574341905312 8434000784809336517 n 262544231 956575161905230 1123139646899789884 n
 
262017093 956575298571883 8137836717763639625 n 262141779 956575321905214 6790843220486230585 n 263812502 956575241905222 9182807736299599778 n

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
MGN 1280x720 10520C00 DIXKD
 வேலணை பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெற்று மூன்று மாதங்கள் முடிந்த பூஸ்டர் ஷாட் பெற தகுதி உடைய 60 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு மூன்றாம் சுற்று தடுப்பூசிகள் (Pfizer Booster Dose) கீழே உள்ள மையங்களில் வழங்கப்பட உள்ளது.
Date Place
30-11-2021 DH Velanai
01-12-2021 DH Velanai
02-12-2021 DH Pungudutivu
03-12-2021 DH Mandaitivu
04-12-2021 MOH Velnai
06-12-2021 Allaipiddy Clinic Centre
 
 

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
covid 19 vacctination poster doctors hand holding syringe with vaccine vector illustration lets get vaccinated lets stop covid 19 promotion e 2EA7M2C
 இன்று முதல் குறிப்பிட்ட பிரிவுகளில் 20 வயதிற்கு மேற்பட்ட இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் தங்களது தடுப்பூசியினை கீழ் குறிப்பிட்டுள்ள விபர ஒழுங்கிற்கமைய போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
  •   2021.10.06 - வேலணை
  • 2021.10.07 - அல்லைப்பிட்டி
  • 2021.10.08 - மண்கும்பான், வேலணை
  • 2021.10.09 - அல்லைப்பிட்டி, மண்டைதீவு
  • 2021.10.10 - நயினாதீவு
  • 2021.10.11 - புங்குடுதீவு
  • 2021.10.13 - புங்குடுதீவு
  • 2021.10.10 - சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை,வேலணை

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

CHINA SRI LANKA JOINT RESEARCH AND DEMONSTRATION CENTRE FOR WATER TECHNOLOGY

More Information about the Competition is included in the attached Advertisement. For any further queries regarding the Competition, you can contact the project Secretary, JRDC from the following contact number, 081 - 2058116

 

Logo competition advertisement 1 655x1024

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 உலக சிறுவர் தினம்  நிகழ்வுகள்- 2021
இவ்வருட உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு பிரதேச செயலரின் ஒழுங்கமைப்பில் சுவிஸ் துர்க்கா அறக்கட்டளையின் அனுசரணையுடன் தேவையுடைய சிறுவர்களிற்கு தமது கற்றலுக்கான போக்குவரத்து வசதிகளை இலகுபடுத்தும் வகையில் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு செய்யப்பட்டது.
சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் நாடளாவிய ரீதியில் இடர் நிலைகளில் உள்ள சிறுவர்களை இனம் கண்டு அவர்கட்கான உளசமூக ஆதரவை வழங்கும் திட்டத்தின் கீழ் தேவையுடைய சிறுவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
வேலணை மத்திய கல்லூரியுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட zoom ஊடான நிகழ்வில் "COVID-19 விடுமுறை காலப்பகுதியில் சிறுவர்களின் நேர்மறையான தகவமைப்பு உத்திகள்" எனும் தலைப்பில் வேலணை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக சமூகவியல் துறைத் தலைவர் மதிப்பிற்குரிய Dr.s.ஜுவசுதன் வளவாளராக கலந்து கொண்டிருந்தார் . நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்தும் கலந்துரையாடியும் பயன் பெற்றனர்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இடர் நிலைகளில் உள்ள சிறுவர்களை இனம் கண்டு அவர்கட்கான உளசமூக ஆதரவை வழங்கும் திட்டத்தின் கீழ் தேவையுடைய சிறுவர் ஒருவரின் கற்றல் செலவினை பொறுப்பேற்று முதற்கட்ட அன்பளிப்பு வழங்கப்பட்டது.
தொல்புரம் கிழக்கு சுழிபுரத்தை சேர்ந்த திரு பா. சிவநாதன் அவர்களால் இவ் அன்பளிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து குறித்த சிறுவனின் கல்விக்கான செலவை அவர் ஏற்ளுள்ளதோடு சிறுவன் தான் ஒரு வைத்தியராக வருவதே தனது இலக்கு என குறித்த நிகழ்வில் உரையாற்றி இருந்தார்.
அனைத்துக்கும் முன்னுரிமை சிறுவர்கள்- என்னும் தொனிப்பொருளில், பட்டினி அற்ற மரங்கள் நிறைந்த தார்மீக நாடொன்றை கட்டியெழுப்பும் சிறுவர் சுற்றாடல் பாதுகாப்பு படையனியை தாபித்தல் மற்றும் 1 லட்சம் பலா மரக் கன்றுகளை நாட்டும் தேசிய வேலைத்திட்டம்.
மதிப்பு மிக்க வேலணை உதவி பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஏற்பாட்டில் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையில் 100 பலா மரக் கன்றுகள் வேலணை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிறுவர் கழக சிறுவர்களுக்கு வழங்கப்பட்டதுடன் கற்றல் உபகரணமும் மற்றும் போசாக்கு பொதி வழங்கல் நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு வேலணை சரஸ்வதி பவுண்டேசன் நிதி அனுசரணை வழங்கியிருந்தார்கள்.
இடர் நிலைகளில் உள்ள சிறுவர்களை இனம் கண்டு கொரோனா கால இடரில் போசாக்கு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தேவையுடைய சிறுவர்களிற்கு வேலணை சரஸ்வதி பவுண்டேசன் (UK) நிறுவனத்தின் அனுசரணையுடன் போசாக்கு உணவு பொதிகள் சிறுவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்கப்பட்டதோடு covid 19 விடுமுறை காலப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வும் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறான பல்வேறு நிகழ்வுகள் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக இடம்பெற்றது.
 
244421428 918454129050667 5673550546607561068 n 244430923 918418192387594 5529004212364697476 n 244197461 918240125738734 1952604969755670790 n
 
243995414 918209249075155 422606270844382926 n 244081949 918209399075140 1927296378478615653 n 243590275 918262595736487 8883006319694780240 n
          
 
 
          
 
 

News & Events

10
ஆக2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
பிப்2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
பிப்2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
பிப்2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top