News
போதை தடுப்பின் ஊடாக மகிழ்ச்சியான குடும்பம் வேலைத்திட்டம் - 2019
போதை தடுப்பின் ஊடாக மகிழ்ச்சியான குடும்பம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு சமுர்த்தி தலைமையக முகாமையாளர் தலைமையில் 2019.10.17ம் திகதி காலை 9.30 - பி.ப 4.00 மணி வரை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் சு.சதீஷ்காந்த் (உளவளத்துணை உத்தியோகத்தர்), ர.ரவிராஜ் (சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்) வளவாளர்களாக கலந்து கொண்டனர். போதை ஒழிப்பு, போதையிலிருந்து மீளல், உளரீதியான சந்தோசமான குடும்பம் போன்ற விடயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டது. இந் நிகழ்வில் 105 சமுர்த்தி பயனாளிகள் கலந்து கொண்டனர்.

பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான ICT பயிற்சி நெறி
எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான Training of officers in Handling ICT Equipments 2019.10.14,15ம் திகதிகளிலும் Training of officers on the Software Application Needed for Office Use 2019.10.17,18ம் திகதிகளிலும் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறிகளுக்கான வளவாளராக சு.கரிகரகணபதி (சிரேஸ்ட விரிவுரையாளர் , உயர் தொழினுட்ப கல்லூரி, யாழ்ப்பாணம்) அவர்கள் கலந்து கொண்டார்.


சர்வதேச சிறுவர் முதியோர் தின விழா - 2019
2019ம் ஆண்டுக்கான வேலணை பிரதேச செயலகத்தின் சர்வதேச சிறுவர் முதியோர் தின விழா திரு. அம்பலவாணர் சோதிநாதன் (பிரதேச செயலர்,வேலணை) அவர்களின் தலைமையில் 2019.10.10ம் திகதி காலை 10.00 மணிக்கு வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக DR.N.முகுந்தன் (சுகாதார வைத்திய அதிகாரி, வேலணை) அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு. T.கனகராஜா (மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர், யாழ்ப்பாணம்) அவர்களும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் சிறுவர், முதியோர், மாற்றாற்றலுடையோரின் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் இவர்களுக்காக நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டது.




தொழில் தேடுவோருக்கான விழிப்பூட்டும் நிகழ்வு
எமது பிரதேச செயலகத்தின் மனிதவள அபிவிருத்தி பிரிவினால் ஒழுங்கமைக்கப்பட்ட தொழில் தேடுவோருக்கான விழிப்பூட்டும் நிகழ்வு 2019.10.15ம் திகதி காலை 9.30 மணிக்கு செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் தொழில் தேடுவோருக்கான உளவியல் சோதனை இடம்பெற்றதுடன் தொழில் வழிகாட்டல் ஆலோசகரால் ஆலோசனை வழங்கப்பட்டது. இவ் விழிப்புணர்வு நிகழ்வில் எமது செயலக பிரிவிற்குட்பட்ட 43 தொழில் தேடுவோர் கலந்து கொண்டனர்.

வாணி விழா - 2019
எமது பிரதேச செயலகத்தின் 2019ம் ஆண்டுக்கான வாணி விழா எமது செயலக நலன்புரி சங்கத்தால் ஒழுங்கமைக்கப்பட்டு 2019.10.08ம் திகதி செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. நவராத்திரி பூசையைத் தொடர்ந்து பாடல், கவிதை, பட்டிமன்றம் என பல்வேறு கலை நிகழ்வுகளும் இவ் விழாவில் இடம்பெற்றது.

























