News & Events

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

 

எமது பிரதேச செயலகத்தில் 2021 - 2025 வரை பிரதேச செயலாளராக கடமையாற்றி தற்போது யாழ் மாவட்ட மேலதிக ரசாங்க அதிபராக பதவி உயர்வு பெற்று சென்ற மதிப்புக்குரிய திரு.கயிலாயபிள்ளை சிவகரன் அவர்களது பிரிவுபசார விழா உத்தியோகத்தர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் 13.08.2025 ஆம் திகதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

1 2

1 2

1 2

1 2

1 2

1 2

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

எமது அன்புக்கும் மதிப்பிற்குமுரிய பிரதேச செயலாளர் திரு.கயிலாசபிள்ளை சிவகரன் அவர்கள் இன்றைய தினம் (01/07/2025) யாழ் மாவட்டத்தின் மேலதிக மாவட்ட செயலாளராக பதவிப் பிரமாணம் செய்துள்ளார் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்... அவர் தம் பணியை சீரும் சிறப்புமாக ஆற்றுவதற்கு நயினை நாகபூசணி அம்பிகையின் அருளை வேண்டி வாழ்த்தி மகிழ்கின்றோம்...

1 2

1 2

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

 

கலை விழா - 2025

1 2

1

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் வேலணை பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா பிரதேச செயலாளர் திரு.கயிலாயபிள்ளை சிவகரன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (24.06.2025) நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக உயர்திரு. நாகலிங்கம் வேதநாயகன் கௌரவ ஆளுநர் அவர்கள் (வடக்கு மாகாணம்), அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு. இலட்சுமணன் இளங்கோவன் - பிரதம செயலாளர் (ஓய்வு நிலை) வடக்கு மாகாணம், திருமதி. லாகினி நிருபராஜ் பிரதிப்பணிப்பாளர், பண்பாட்டலுவல்கள் அலகு (வடக்கு மாகாணம்) அவர்களும் கௌரவ விருந்தினராக கலாபூஷணம் மருதன் கந்தையா மூத்த கலைஞர், (சரவணை மேற்கு) அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். தீவகத்தின் பெருமை சேர்க்கும் நாடகக் கலைஞர் அமரர்.செல்லையா சிவராசா அவர்களின் ஞாபகார்த்த துறையூர் செல்லையா சிவராசா அரங்கில் இடம்பெற்ற பிரதேச பண்பாட்டு விழாவானது தீவகத்தின் பல்வேறுபட்ட கலை இலக்கிய கோணங்களை பிரதிபலித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பண்பாட்டு ஊர்வலம், ஊர்தி பவனியானது துறையூர் காளி கோயிலில் பூஜை ஆராதனைகளோடு ஆரம்பமாகி துறையூர் ஐயனார் சனசமூக நிலையத்தை வந்தடைந்தது. வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கலைமன்றங்களின் ஒத்துழைப்புடன் மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், காவடி, கும்மி, வசந்தனடி, என்பவற்றோடு வேலணை பிரதேச செயலக பிரிவினை சித்தரிக்கும் வகையில் ஊர்திப் பவனிகளும் மங்கல இசையோடு சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கலைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கல், கௌரவிப்பு நிகழ்வுகள், பண்பாட்டு பெருவிழாவில் பிரதேச செயலக பிரிவுகளை பிரதிபலிக்கும் ஊர்திகளுக்கான போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள் வழங்கல் என்பவற்றோடு வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தகுதிவாய்ந்த கலைஞர்களுக்கான 2025 ஆம் ஆண்டுக்கான கலைவாரிதி, மற்றும் இளங்கலைஞர், விருதுகள் என்பன வழங்கப்பட்டன.
கலைவாரிதி விருது
திரு.பவுலீன் அன்ரன் பெர்னான்டோ - நாட்டுக்கூத்து (மண்டைதீவு)
திரு. தாவீது தேவராசா - நாடகம்- சரவணை மேற்கு வேலணை
திரு. நா.கணபதிப்பிள்ளை குமாரசூரியர் - இலக்கியம் ( நயினாதீவு)
திரு. அந்தோனிப்பிள்ளை யேசுதாசன் - இசை (பாடல்) அல்லைப்பிட்டி
இளங்கலைஞர் விருது
திருமதி.சரஸ்வதி கோபிநாத் - இசை 6 ஆம் வட்டாரம் வேலணை மேற்கு
செல்வி. சிவானுஜா சிவராசா - நடனம் - வேலணை
திருமதி.பகீரதன் சுவர்ணமுகி - இசை- நடனம்- 6 ஆம் வட்டாரம் வேலணை மேற்கு
திருமதி.மேகலா செல்வகுமார் - நடனம்- வேலணை
பண்பாட்டுப் பெருவிழா கலை நிகழ்வுகள்.......
மங்கல இசை - பரமநாதன் குகராஜ் குழுவினர்வரவேற்பு நடனம் - ஐயனார் கலைமன்றம், வேலணை
(நெறியாள்கை திருமதி மேகலா செல்வக்குமார்)
கிராமிய இசை -ஐயனார் கலைமன்றம், வேலணை(நெறியாள்கை திருமதி. சரஸ்வதி கோபிநாத்)
கிராமிய நடனம் - திருநாவுக்கரசு கலை இலக்கிய மன்றம், புங்குடுதீவு
(நெறியாள்கை செல்வி சிவனுஜா சிவராசா)
நாட்டுக்கூத்து - மண்டைதீவு புனித பேதுருவானவர் கலைமன்றம்
வாள் நடனம் - ஐயனார் கலைமன்றம் ,வேலணை தெற்கு
(நெறியாள்கை செல்வி சிவனுஜா சிவராசா)
கிராமிய இசை - ஐயனார் கலைமன்றம், வேலணை
(நெறியாள்கை திருமதி. சரஸ்வதி கோபிநாத்)
சாஸ்திரிய நடனம் - ஐயனார் கலைமன்றம், வேலணை
(நெறியாள்கை திருமதி மேகலா செல்வக்குமார்)

1 2

1 2

1 2

1 2

1 2

1 2

1 2

1 2

 

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

வேலணை பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு இடையலான விளையாட்டு விழா -2025

1 2

1 2

1 2

News & Events

10
ஆக2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
பிப்2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
பிப்2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
பிப்2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top