News
2020/10/22ம் திகதி பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்ற மரநடுகை நிகழ்வில் விவசாய பாட இணைப்பாளர் திரு. குற்றாலம் இளங்குமரன் அவர்களின் வழிகாட்டலில் யா/ இந்து மகளிர் கல்லூரி மாணவிகளால் உருவாக்கப்பட்டு அன்பளிப்பு செய்யப்பட்ட மலைவேம்பு மரங்கள் அல்லைப்பிட்டி வீதியோரங்களில் நாட்டப்பட்டதுடன் கிராம அலுவலர் குலசிங்கம் அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்ட சவுக்கு மரங்கள் கடற்கரை ஓரங்களிலும் நாட்டப்பட்டது.


வேலணை பிரதேச செயலகம் மற்றும் இதம் நிறுவனமும் இணைந்து சிறந்த பெண் தொழில் முயற்சியாளருக்கான விருது (பிரதேச மட்டம்) வழங்கும் நிகழ்வு 2020.10.16ம் திகதி காலை 11.00 எமது செயலகத்தில் நடைபெற்றது.


சர்வதேச கடற்கரையை சுத்தப்படுத்தும் தினம் மற்றும் தேசிய கடல்சார் வளங்களைப் பாதுகாக்கும் வாரத்தை முன்னிட்டு செப்டம்பர் 22ம் திகதியாகிய இன்று மாவட்ட ரீதியில் புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோவில் அருகாமையில் உள்ள கடற்கரை பிரதேசம் தெரிவு செய்யப்பட்டு சிரமதானம் செய்யப்பட்டது. கரையோர சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் நடாத்தப்பட்ட இந் நிகழ்வில் அரசாங்க அதிபர், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர், மாணவர்கள், கடற்படையினர், கரையோரம் பேணல் உத்தியோகத்தர்கள், கடற்தொழில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இச் சிரமதான நிகழ்வில் கலந்து கொண்டனர்.




இவ்வருடம் பெரும்போகத்தில் வயல் செய்யும் காணிகளை அதிகரிக்கும் நோக்கில் பிரதேச செயலர் தலைமையில் இன்றைய தினம் (2020.09.09) தெங்கன் குளத்தை(சரவணை கிழக்கு) சூழவுள்ள சுமார் 2500 பரப்பளவுள்ள காணிகளை உரிமையாளர்களிற்கும் வயல் செய்ய ஆர்வமுள்ளவர்களிற்கு குத்தகை அடிப்படையிலும் விதைப்போருக்கு காணிகளை அடையாளம் கண்டு வரம்புகள் கட்டும் செயற்பாடு இடம்பெற்றது.
























