News
பிரதேச அபிவிருத்தித் திட்டம் தயாரித்தல் பயிற்சி பட்டறை இன்றைய தினம் (2020.09.02) எமது செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு நடைபெற்றது. இப் பயிற்சி பட்டறையில் பிரதேச சபை தலைவர்,உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


வேலணை பிரதேச செயலகமும் யாழ் மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய சுதந்திர வானமும் பட்டம் விடும் நிகழ்வும் 2020.08.30ம் திகதி வேலணை துறையூர் ஐயனார் விளையாட்டு மைதானத்தில் மாலை 3.00 மணிக்கு நடைபெற்றது. இந் நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், எமது செயலக கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் வேலணை பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிறுவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.



வேலணை மேற்கு அம்பிகை நகர பொது மண்டபத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்களால் பாதுகாப்பான புலம்பெயர்தல் மற்றும் போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு 25.08.2020ம் திகதி நடத்தப்பட்டது.

வேலணை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கடற்தொழிலாளர்கள் சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட கரையோரங்களை துப்பரவு செய்யும் நிகழ்வு 28.08.2020ம் திகதி வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கடற்கரையோரங்களில் நடைபெற்றது. இச் சிரமதான நிகழ்வில் எமது செயலகத்தின் கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



எமது பிரதேச செயலகத்திற்குட்பட்ட J/16 கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் மாற்றாற்றலுடையோர் வீட்டில் 22.08.2020ம் திகதி இடம்பெற்ற சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.
























