News

தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் நிகழ்வு எமது பிரதேச செயலகத்திலும் சிறப்பாக நடைபெற்றது. 2021.01.18ம் திகதி காலை பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.



வனவள இராஜாங்க அபிவிருத்தி அமைச்சின் 2020.09.24 சுற்றுநிருபத்திற்கமைய வளர்ந்து வரும் நாட்டிற்கு வளரும் ஒரு மரம் 'ஹெதன ரட்ட வெடென கஸக்' எண்ணக்கருவின் கீழ் 'துருலிய லங்கா' தேசிய மரநடுகை நிகழ்ச்சித்திட்டத்தில் எமது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட J/32 கிராம அலுவலர் பிரிவில் 2020.11.03ம் திகதி நடைபெற்றது.

2021 ஆம் ஆண்டிற்கான செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று காலை 9.00 மணிக்கு எமது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. கோவிட் 19 கட்டுப்பாடுகளுக்கு அமைய உத்தியோகத்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் . தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் தேசியகீதம் இசைக்கப்பட்டு உத்தியோகத்தர்களால் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் பொதுசுகாதாரப் பரிசோதகரின் கோவிட் 19 தொடர்பான உரையும் இடம்பெற்றது.





























