web banner

நீதியமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடமாடும் சேவை இம்மாதம் 29, 30 ஆம் திகதிகளில் காலை 9.30 மணிதொடக்கம் 4 மணிவரை யாழ். மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந் நடமாடும் சேவையில் பல திணைக்களங்கள் கலந்துகொள்ளவுள்ளமையினால் பொதுமக்கள் இந் நடமாடும் சேவையை பயனுள்ளவகையில் பயன்படுத்தி தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியுமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் தெரிவித்தார்.

மேலும்இ இந் நடமாடும் சேவையில் கலந்துகொள்ளவுள்ள திணைக்களங்களும் அவற்றின் மூலமாக மக்களுக்கு வழங்கப்படவுள்ள சேவைகளும் வருமாறு. 
 
இல  திணைக்களங்கள் சேவைகள் ஆவண விபரங்கள்
1.
நீதி அமைச்சின் - தொழிலாளர் தீர்ப்பாயம்,சமாதான நீதவான், தீடீர் மரண விசாரணை,
சத்திய பிரமாணத்திற்கான ஆணையாளர்,அகில இலங்கை மொழிபெயர்ப்பாளர் தொடர்பான சேவைகள்.
* தொழிலாளர் சம்பந்தப்பட்ட பிணக்குகள் வெளிநாட்டு அமைச்சின் மூலமான சத்தியபிரமாண சான்றளிப்பு pdfic2
2.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம்

*  காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விபரங்களை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பார்வையிட முடியும்.

* காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான புதிய முறைப்பாடுகளை மேற்கொள்ள முடிவதுடன்,காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பிக்கமுடியும்

 
3. சட்ட உதவி ஆணைக்குழு

* நிலுவையிலிருக்கும் ஏதேனும் வழக்குகள் தொடர்பில் சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளல்.

* ஏதேனும் வழக்கு ஒன்றை தொடர்வதற்கான சட்டத்தரணிகளின் சேவையினை பெற்றுக்கொள்ளல்.

 
4. இழப்பீட்டுக்கான அலுவலகம்

* புனர்வாழ்வு அதிகாரசபைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட பொதுமக்கள் சொத்திழப்பு, இறப்பு மற்றும் காயம் தொடர்பான கோவைகள், அரசாங்க ஊழியர் சொத்திழப்புக்குரிய கோவைகள் மற்றும் போரினால் சேதமடைந்த ஆலயங்களின் கோவைகள் தொடர்பாக ஏற்கனவே அனுப்பப்பட்ட இதுவரை இழப்பீட்டை பெற்றுக்கொள்ளாதவர்களும்  மேலதிகமாக இவ் ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும்

* சுயதொழில் திட்டப் பயிற்சிநெறிகள்  தொடர்பான விபரங்களை இந் நடமாடும் சேவையில் பெற்றுக்கொள்ளலாம்.


pdfic2
5.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம்

* இந் நிறுவனத்தினால் விழிப்புணர்வு தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் சம்மந்தமான  செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.  
6. குற்றம் மற்றும் சாட்சியங்களினால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான அதிகாரசபை

* குற்றச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சாட்சியங்கள் என்ற வகையில் மக்களின் பிரச்சினைகள் அல்லது முறைப்பாடுகளைப்  பெற்றுக்கொள்ளவதற்கான விசேட சாளரமொன்று திறக்கப்பட்டுள்ளதுடன்  அதற்கமைய அவர்கள் தமது பிரச்சினைகளை இவ்விடத்தில் முன்வைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

* இத்திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.


pdfic2
7. ஆட்பதிவுத் திணைக்களம்

* புதிய, புதுப்பித்தல் மற்றும் தொலைந்த அடையாள அட்டைகளை பெறுவதற்கு பூரணப்படுத்தப்பட்ட   

       விண்ணப்ப படிவத்தினை தொடர்புடைய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவேண்டும்

*   ஏற்கனவே பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அடையாள அட்டையை பெறுவதற்கான விண்ணப்பத்தின் தற்போதைய நிலையினை அறிந்துகொள்ளமுடியும்.

*   அடையாள அட்டைக்கான விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதில் இடர்பாடுகளை எதிர்நோக்குபவர்கள் அதுதொடர்பான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளமுடியும்.

 
8. பதிவாளர் நாயகத் திணைக்களம் *   காலம்கடந்த பிறப்பு, இறப்புஇ திருமண பதிவுகளை உரிய ஆவணங்களுடன் சமூகமளித்து  சேவைகளை பெற்றுக்கொள்வதுடன் இது தொடர்பான  மேலதிக ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளமுடியும்  
9. சமூகச் சீர்திருத்த அலுவலகம்

*   சமுதாய சீர்திருத்த திணைக்களத்தின் சேவைகள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும்.

 
10. மாகாணக் காணி ஆணையாளர் திணைக்களம்

* அரச காணிகள் தொடர்பில் காணி அனுமதிப்பத்திரம் மற்றும் அளிப்புப்பத்திரம் தொடர்பிலான சேவைகளை பெற்றுக்கொள்ளல்.

*   அரச காணி தொடர்பில் ஏதேனும் பிணக்குகள் காணப்படின் அதுதொடர்பான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளல்.

 
11. மத்தியஸ்த சபை

* மத்தியஸ்தர் சபையினூடாக வழங்கப்படும் சேவைகள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளல். (துண்டுப்பிரசுரம் மற்றும் வீடியோ கண்காட்சி)

* ஏதேனும் பிணக்குகள் தொடர்பில் மத்தியஸ்தர் சபை தவிசாளரிடம் முறைப்பாடுகளை சமர்ப்பிக்கமுடியும்.

 
12. சிறைச்சாலைத் திணைக்களம்

*   சிறைச்சாலை கைதிகள் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள இடங்கள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

*   சிறைச்சாலை அலுவலர்களுக்கான தொழில்தகைமை தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளல்

*   கைதிகளை நிகழ்நிலையில் பார்வையிடுவதற்கான அறிமுகம்

 
13. சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவு *   சிறுதொழில் முயற்சியாளர்களின் உள்ளுர் உற்பத்திப் பொருட்களின் விற்பனை நடவடிக்கைகள் இடம்பெறும். pdfic2
14.

தொழில் பயிற்சி அதிகார சபை

*   தொழிற்பயிற்சி அதிகாரசபையினால் வழங்கப்படும் தொழில் பயிற்சிகள் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடுகள் இடம்பெறும்  
மேலும் கடன் இணக்க சபைத் திணைக்களம் ,பனை அபிவிருத்தி சபை ,புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் அலுவலகம் ஆகிய நிறுவனங்களின் சேவைகளும் இந்நடமாடும் சேவையில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

நீதியமைச்சினால் மேற்கொள்ளப்படும் நீதிக்கான அணுகுவழி நடமாடும் சேவையில் பல திணைக்களங்கள் கலந்து கொள்ளவுள்ளமையினால் பொதுமக்கள் இந் நடமாடும் சேவையைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தித் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். 

F min

2022ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் (03.01.2022) பிரதேச செயலர் கயிலாயபிள்ளை சிவகரன் அவர்களின் தலைமையில்வேலணை பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதத்துடன் ஆரம்பமான நிகழ்வில் தொடர்ந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் சத்தியப்பிரமாண உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் உரையுடன் ஆரம்பமான நிகழ்வில் Covid 19 பாதுகாப்பு தொடர்பான சிறப்புரை வேலணை சுகாதார வைத்திய அதிகாரியினால் நிகழ்த்தப்பட்டது.
 
 
 
 
Vasanth and co 1920 x 450 1920x450       271178323 976945683201511 5116070395087365135 n       271179880 976945769868169 6551360762719494669 n
 
271186803 976945813201498 9098235881432861308 n       271179330 976945849868161 4178615146488669394 n       271212956 976945896534823 2714705690875786524 n
 
271167784 976946019868144 9186749381441177288 n       271179529 976946103201469 3033047892635535739 n       271190205 976946069868139 5487851681195188450 n

வேலணை பிரதேச செயலக உத்தியோகத்தர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் விழா  2022.01.18ம் திகதி பிரதேச செயலர் தலைமையில் எமது பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந் நிகழ்வில் பொங்கல் நிகழ்வுகளை தொடர்ந்து உத்தியோகத்தர்களுக்கான கயிறு இழுத்தல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் உத்தியோகத்தர்கள் உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் பங்குபற்றி தமக்கான பரிசுகளைப் பெற்றுக்கொண்டனர்.

002      001     4jpg

Untitled 6      Untitled 7     Untitled 13

Untitled 21     Untitled 14     Untitled 5

Untitled 16     Untitled 24     Untitled 8

Untitled 20     Untitled 19     Untitled 22

அரச கரும மொழிகள் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் மதிப்பினை ஏற்படுத்தல் திட்டத்தின் கீழ் மணவர்கள் மத்தியில் மும்மொழி திறன்களை மேம்படுத்தும் நோக்கில் யா/நயினாதீவு ஸ்ரீகணேசா கனிஸ்ட வித்தியாலயத்திற்கு 2021.12.14ம் திகதி ரூபாய் ஐம்பதாயிரம் பெறுமதியான மும்மொழிகள் அடங்கிய புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

267195420 964919447737468 4483511647268060415 n     267652726 964919717737441 2996352977337703979 n     267706206 964919631070783 6307930984928665620 n

 

266455151 964919787737434 2165208188800135222 n     268287399 964919844404095 5975209972116830999 n     266468546 964919907737422 2445518163933045489 n

News & Events

10
Aug2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
Feb2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
Feb2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
Feb2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top