செய்திகள்
News & Events
- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
இன்றைய தினம் எமது பிரதேச செயலகத்தில் முன்பள்ளிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாகவும் covid 19 அச்சுறுத்தலை குறைப்பதற்காகவும் பிரதேச சுகாதார மேம்பட்டு குழுவை உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடல் 21.08.2020ம் திகதி இடம்பெற்றது.

- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
தீவகம் தெற்கு சுற்றுச்சூழல் பேரவையால் மழைநீர் சேகரிப்பும் நீர் முகாமைத்துவமும் இறுவட்டு வெளியீடு 19.08.2020ம் திகதி வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இது வேலணை பிரதேச செயலகத்தின் பொதுநலம் கருதிய வெளியீடு. நீரானது மனித அசைவியக்கத்திற்கு மட்டுமன்றி சூழலில் விலங்குகள் மற்றும் தாவரங்களின் அசைவியக்கத்திற்கும் பிரதானமானது. தீவக பிரதேசம் வடமாகாணத்தின் ஏனைய பிரதேசங்களுக்கான சராசரி மழை வீழ்ச்சி பெறுகின்ற போதும் கடும் வறட்சியை விரைவாக சந்திக்கின்றது. மழை நீரை தரைக்கீழ் நீராக மாற்றுவது மட்டுமே தீவகத்தில் வறட்சி தணிப்பிற்கு நீண்டகால தீர்வாகும். உலகின் பல நாடுகள் போன்று மழை நீர் முகாமையினை நாமும் மேற்கொண்டு பசுமைத்தீவினை உறுதி செய்வோம்.


- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
உலக சுற்றுச்சூழல் தினம் புவிக்கோளையும் அதன் இயற்கையையும் காப்பாற்ற தேவைப்படும் சுற்றுச்சூழல் செயல்பாட்டைப் பற்றிய நேரடியான உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஜூன் 05ம் திகதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 2020ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு எமது பிரதேச செயலக வளாகத்திலும் கிராம அலுவலர் பிரிவுகளிலும் மரநடுகை நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.




- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
புங்குடுதீவு கிழக்கு கிராம அலுவலர் பிரிவிலுள்ள சிவலப்பிட்டி சனசமூகநிலைய முன்பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் நிகழ்வு 2020.07.06ம் திகதி காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. இம் மாணவர்களுக்கான சத்துணவு சனசமூகநிலைய நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டது.
- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
எமது பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர் நலன்புரிச்சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் இரத்ததான நிகழ்வு இம்முறையும் 2020.05.04ம் திகதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் எமது அலுவலக உத்தியோகத்தர்கள், எமது பிரிவிற்குட்பட்ட விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கு பற்றிய மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் உத்தியோகத்தர் நலன்புரிச்சங்கத்தின் சார்பில் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.



























