செய்திகள்
News & Events
- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
மத்தியஸ்த திறன்கள் மற்றும் உபாய மார்க்கங்கள் பற்றிய பயிற்சிநெறி
யாழ்ப்பாண மாவட்டத்தின் வேலணை மத்தியஸ்த சபைக்கான உறுப்பினர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான மேற்படி பயிற்சி பட்டறை 2019.12.08ம் திகதி தொடக்கம் 2019.12.12ம் திகதி வரை காலை 9.00 மணியிலிருந்து மாலை 4.00 மணி வரை ஐந்து நாட்கள் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறியின் வளவாளராக திரு.பீ. சனாதனசர்மா (யாழ்ப்பாண மாவட்ட மத்தியஸ்த பயிற்சி அலுவலர்) அவர்கள் கலந்து கொண்டார். 25 பயிற்சி பெறுநர்கள் இப் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
சமுர்த்தி பயனாளிகளுக்கான தொழில் முயற்சி திறன் விருத்தி பயிற்சி -2019
எமது செயலக பிரிவைச் சேர்ந்த சமுர்த்தி பயனாளிகளுக்கான தொழில் முயற்சி திறன் விருத்தி பயிற்சி 2019.12.10ம் திகதி காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.15 மணி வரை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறியில் 40 தொழில் முயற்சியாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.


- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
B3S மென்பொருள் தொடர்பான பயிற்சி நெறி
எமது பிரதேச செயலகத்தில் B3S மென்பொருளினை கையாளும் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறி 2019.12.02ம் திகதி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அ. சோதிநாதன் (பிரதேச செயலர், பிரதேச செயலகம், வேலணை) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறியில் கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வெளிக்கள, அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி நெறியின் வளவாளராக யாழ் மாவட்ட செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஸ்ரீ .சிவதர்சினி அவர்கள் கலந்து கொண்டார்.
- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
எமது செயலக உத்தியோகத்தர்களுக்கான ICT பயிற்சி நெறிகள்
எமது செயலக உத்தியோகத்தர்களுக்கான Fundamentals Of Photoshop Training 2019.12.03ம் திகதியும் Handling tools in Photoshop Training 2019.12.04ம் திகதியும் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறிகளுக்கான வளவாளராக மிலனோ பிரசாத் கமிலஸ் (அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம்,யாழ்ப்பாணம்) அவர்கள் கலந்து கொண்டார்.

- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
டெங்கு கட்டுப்படுத்தல்
எமது பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கு நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எமது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் வேலணை சுகாதார பணிமனை உத்தியோகத்தர்கள் இணைந்து எமது செயலக அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளிலும் உள்ள வீடுகள் மற்றும் கைவிடப்பட்ட பற்றைக்காணிகளுக்கும் தரிசிப்பினை மேற்கொண்டு டெங்கு தொடர்பாக பார்வையிட்டு அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர் . அந்த வகையில் உரிய இடங்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டும் டெங்கு நோய் பரவுவதற்கு ஏதுவாக உள்ள இடங்கள் உடனடியாக துப்பரவு செய்யுமாறும் பணிக்கப்படுகின்றது. மேலும் டெங்கு தொடர்பான விழிப்புணர்வும் அறிவுறுத்தல்களும் பிரதேச வாழ் மக்களுக்கு தொடர்ந்தும் எடுத்துரைக்கப்பட்டு வருகின்றது.
























