செய்திகள்
News & Events
- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
புதிய பயனாளிகளுக்கு சமுர்த்தி உரித்துச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
புதிய பயனாளிகளுக்கு சமுர்த்தி உரித்துச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2019.06.08ம் திகதி காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிவஞானம் சிறீதரன், பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் 811 புதிய சமுர்த்தி பயனாளிகளுக்கான சமுர்த்தி உரித்துச் சான்றிதழ் வழங்கப்பட்டது.


- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
தேசிய சுற்றாடல் தினம் - 2019
தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மண்கும்பான் கிராம அலுவலர் பிரிவில் (ஜே/11) 2019.06.04ம் திகதி காலை 9.30 மணிக்கு மாவட்ட மட்ட மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் யாழ் மாவட்ட செயலக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலர், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், திட்டமிடல் கிளை உத்தியோகத்தர்கள்,கமநல சேவை திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,கிராமிய அபிவிருத்தி சமூகத்தின் தலைவர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.



- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
தேசிய சுற்றாடல் தின கொண்டாட்ட வாரம் (2019.05.30 - 2019.06.05) தொடர்பான விழிப்புணர்வு
மேற்படி விழிப்புணர்வு நிகழ்வு 2019.05.29ம் திகதி காலை 11.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வளி மாசடைதல் மற்றும் முறையற்ற தாக்கங்களைக் குறைத்துக்கொள்ளுதல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. திரு. இ. சுரேந்திரன் (உதவி திட்டமிடல் பணிப்பாளர்,மாகாண விவசாய அமைச்சு, வட மாகாணம்) வளவாளராக கலந்து கொண்டார். பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள் இவ் விழிப்புணர்வில் கலந்து கொண்டனர்.
- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
நயினாதீவு முதியோருக்கான மருத்துவ முகாம்
2019ம் வருடத்திற்குள் பிரதேச மட்டங்களில் மாதத்திற்கு ஒன்று எனும் அடிப்படையில் வேலணை சுகாதார வைத்திய அதிகாரியினதும் வேலணை பிரதேச வைத்தியசாலை பல் வைத்திய நிபுணரின் ஒத்துழைப்புடனும் பிரதேச செயலகம் வேலணையின் சமூக சேவைப் பிரிவினால் முதியோருக்கான மருத்துவ முகாம் நடாத்தப்பட்டது. ஜே/35, ஜே/36 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த முதியோருக்கான இம் மருத்துவ முகாம் நயினாதீவு நியாப் மண்டபத்தில் 2019.05.30ம் திகதி காலை 9.00 - 2.00 இடம்பெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட முதியோர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
தொழில் வழிகாட்டல் விழிப்புணர்வு நிகழ்வு
பெற்றோர்களுக்கான இந் நிகழ்வு 2019.05.27ம் திகதி பிரதேச செயலர் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இவ் விழிப்புணர்வில் 30 பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.திருமதி.பி.சிவஞானவதி (உதவி பணிப்பாளர்,காணிப்பிரிவு, மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்) மற்றும் திரு.இ. பொன்னம்பலம் (மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட பெற்றோர்களுக்கு அவர்களது பிள்ளைகளுக்கான தொழில் வழிகாட்டல் மற்றும் பசுமையான சூழலை பேணுவதற்கான அவர்களது சமூக பொறுப்புடைமை தொடர்பாக கருத்துரை வழங்கப்பட்டது.


























