News & Events

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

 வீதிப்பாதுகாப்பு வாரம் - 2019

வட மாகாணத்திலுள்ள போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடர்களை நிவர்த்தி செய்யும் நோக்கிலும் வீதி விபத்துக்களை குறைப்பதற்காகவும் கௌரவ ஆளுநரின் வழிகாட்டலில் வட மாகாண வீதி பாதுகாப்பு சபையும் ஆளுநர் செயலகமும் இணைந்து எதிர்வரும் 2019.10.07ம் திகதி தொடக்கம் 2019.10.13ம் திகதி வரையிலான ஒரு வார காலம் வீதிப்பாதுகாப்பு வாரமாக பிரகடனப்படுத்தயுள்ளது. அந்த வகையில் 2019.10.07ம் திகதி காலை 9.30 மணிக்கு செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவி பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு வீதிப்பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழி எடுத்துக்கொண்டதுடன் வீதிப்பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் எமது செயலக உத்தியோகத்தரால் எடுத்துரைக்கப்பட்டது.

IMG 6cd2b5f9710e369e7a6fa7dd497ca06e V    IMG fbeb69b08ed4450073873b72760941bb V

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

சப்த தீவக நவராத்திரி விழா - 2019

வட மாகாண கலாசார திணைக்களத்தின் வழிகாட்டுதலில் வேலணை பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பில் 2019.10.02, 2019.10.03 ஆகிய இருதினங்கள் பி.ப 3.00 மணிக்கு புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கில் சப்ததீவக நவராத்திரி விழா - 2019 மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவில் ஊர்காவற்றுறை, காரைநகர், நெடுந்தீவு, வேலணை ஆகிய பிரதேச செயலகங்கள் கலந்து கொண்டன. இவ் விழாவின் முதல் நாள் நிகழ்வில் திருமதி. சுஜீவா சிவதாஸ் (உதவிப் பணிப்பாளர், பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் – வட மாகாணம்) அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இரண்டாம் நாள் நிகழ்வு திரு. இ. இளங்கோவன் (செயலாளர், கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு – வடமாகாணம்) அவர்கள் தலைமையில் இடம்பெற்றது

 IMG 1c1849a1617de2d8fb82d03cbe9a5f1c V     IMG 2bb00b9d5e7e7e3417f252cd0475317f V

 

IMG 850bf22b921ea11e0f895593d3860e7a V     IMG 576f7861c10054fa0fb9bb9fc3880bc6 V     

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

அமைதி மற்றும் நல்லிணக்கம் குறித்த ஒரு நாள் நிகழ்வு

அமைதி மற்றும் நல்லிணக்கம் குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்வு தேசிய ஒருமைப்பாடு மற்றும் மத நல்லிணக்க ஆணைக்குழுவின் நிதி உதவியுடன்  வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 2019.09.09ம் திகதி காலை 9.30 - 4.00 மணி வரை இடம்பெற்றது. இவ் விழிப்புணர்வு நிகழ்வில் வேலணை பிரதேச செயலக மாதர் கிராம  அபிவிருத்தி சங்க பயிலுனர்கள், இளைஞர்கள், பட்டதாரி பயிலுனர்கள் கலந்து கொண்டனர்.

 

DSC 8354  DSC 8375

 

DSC 8374  DSC 8371

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

பண்பாட்டு பெருவிழா - 2019

வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் நிதி அனுசரணையுடன் வேலணை பிரதேச கலாசார பேரவையும் பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பண்பாட்டு பெருவிழா -2019 திரு. அம்பலவாணர் சோதிநாதன் (பிரதேச செயலரும் கலாசார பேரவைத் தலைவரும், வேலணை) அவர்களின் தலைமையில் 2019.09.17ம் திகதி பி.ப 3.00 மணிக்கு அல்லைப்பிட்டி புனித பிலிப்நேரியார் தேவாலய திறந்த அரங்கில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இவ் நிகழ்வின் பிரதம விருந்தினராக உயர்திரு. இ. இளங்கோவன் (செயலாளர், கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு – வடமாகாணம்) அவர்கள் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக திருமதி. சுஜீவா சிவதாஸ் (உதவிப் பணிப்பாளர், பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் – வட மாகாணம்) அவர்களும் கௌரவ விருந்தினராக அருட்தந்தை மனுவேற்பிள்ளை டேவிட் அடிகளார் (பங்குத்தந்தை, அல்லைப்பிட்டி மண்டைதீவு) கலந்து கொண்டனர்.

இவ் விழாவில் பல்வேறு இசை, நடன நிகழ்வுகள் மற்றும் நாட்டுக்கூத்து நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட வயலின் பயிற்சி நெறியில் பங்கேற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன்  கலைஞர்களுக்கான 2019ம் ஆண்டின் கலைவாரிதி விருது, 2019ம் ஆண்டின் இளங்கலைஞர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

      IMG c73b45bc95b46711555c94bbf3067df0 V   IMG d0c546a57b49bd37d1f984ba3eb072cd V

      IMG 4c23085be4af95c77ce7f8f31ff36094 V   IMG f08b7c80e82926d8aa12c07434816cdd V 1

      IMG 13250e8826a7484f9277bdb507e616cf V   IMG b0a8f23f0efa92ee460bd3032ae747a9 V

      IMG 287789a04009d7fce08bf27da829600b V   IMG 1600c279a1a1ae38716f3a8e77bc4893 V

      IMG af136292390fa2eea79cb1336a1aeb9f V   IMG 4a163b28fb244a90ef0e279e7c868b95 V

      IMG 0fb205e060915e19d698f2e0883bcc18 V   IMG 6d36d2c653b5853549694b4ef9a87ed2 V

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

நாட்டுக்காக ஒன்றிணைவோம்

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க அரசின் சகல அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் சட்ட பூர்வமான நிறுவனங்களின் ஒருங்கிணைந்த செயற்பாட்டில் "நாட்டுக்காக ஒன்றிணைவோம்" யாழ்ப்பாண மாவட்ட தேசிய நிகழ்ச்சித்திட்டம் 2019.08.23ம் திகதி தொடக்கம் 2019.08.30ம் திகதி வரை இடம்பெற்றது. 

அந்த வகையில் எமது பிரதேச செயலகத்திற்குட்பட்ட கூடுதலான கவனம் செலுத்தப்பட வேண்டிய மக்களின் தேவைகள் மற்றும் பிரச்சனைகள் இனங்காணப்பட்டு பல்வேறு அமைச்சு, திணைக்களம் மற்றும் அரச நிறுவனங்கள் மூலம் நிறைவேற்றப்படக்கூடிய சேவைகள் மற்றும் பிரச்சனைகள் இவ்வேலைத்திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதில் ஜனாதிபதி செயலகத்தினால் நெறிப்படுத்தப்படும் தேசிய அபிவிருத்தி கருத்திட்டங்களான வறுமை ஒழிப்பு, போதைப்பொருள் ஒழிப்பு தெளிவூட்டல் நிகழ்வுகள், சிறுநீரக நோய் நிவாரணம், தேசிய உணவுற்பத்தி செயற்றிட்டம், சுற்றாடல் பாதுகாப்பு செயற்றிட்டம் சிறுவர்களை பாதுகாப்போம் திட்டத்தின் ஊடாக கல்வி உபகரணங்கள் வழங்குதல் மற்றும் கல்வி தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வுகள் போன்ற செயற்றிட்டங்கள் வெவ்வேறு அமைச்சுக்களால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

        IMG 20190823 130736 copy   20190825 090922

 

News & Events

10
ஆக2026
‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

‘அத்தம’ தேசிய தூய்மை வேலைத்திட்டம்

“அத்தம “ தேசிய வேலை திட்டத்தின் பிரதான நிகழ்வு...

18
பிப்2026
ஆக்கத்திறன் கண்காட்சி 2026

ஆக்கத்திறன் கண்காட்சி 2026

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வேலணை...

09
பிப்2026
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர தின விழா

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78 ஆவது சுதந்திர...

09
பிப்2026
தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட பயிற்சி முகாம்களுக்கான தெரிவுகள் - 2026

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் தேசிய மட்ட கபடி,வலைப்பந்தாட்டம்,கரப்பந்தாட்ட...

Scroll To Top