செய்திகள்
News & Events
- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மற்றும் பராமரிப்பு பற்றிய தேசிய வார நிகழ்வு
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அனுசரனையுடன் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி மற்றும் பராமரிப்பு பற்றிய தேசிய வார நிகழ்வு 2019.07.26,29ம் திகதிகளில் வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது. இந் நிகழ்வில் வேலணை பிரதேச செயலகத்திற்குட்பட்ட முன்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டதுடன் முன்பள்ளிமாணவர்களின் அழகியல் கலை நிகழ்வுகளும் ஆசிரியர், பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெற்றன.



- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
ஆடிப்பிறப்பு பண்பாட்டு விழா
வேலணை பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்திய ஆடிப்பிறப்பு பண்பாட்டு விழா பிரதேச செயலர் தலைமையில் 2019.07.17ம் திகதி காலை 10.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இந் நிகழ்வில் கலாநிதி ஆறு திருமுருகன் (தலைவர்,தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானம்) அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.பல்வேறு கலை நிகழ்வுகளும் இந்நிகழ்வில் இடம்பெற்றன.
- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
தேசிய போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு வடக்கு மாகாண ஆளுநர் அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் வேலணை பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினரால் ''போதையற்ற தேசத்தை கட்டியெழுப்புவோம்." எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு ஊர்வலம் 2019.06.28ம் திகதி துறையூர் ஐயனார் சனசமூகநிலையத்திலிருந்து பிரதேச செயலகம் வரை இடம்பெற்றது. இவ் விழிப்புணர்வு ஊர்வலத்தில் வேலணை பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள்,ஏனைய உத்தியோகத்தர்கள், கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
மண்டைதீவு சுற்றுலா மையம்
உல்லாசப் பயணத்துறை அமைச்சின் நிதி உதவியுடன் மண்டைதீவில் (ஜே/07) அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா மையத்தின் பரீட்சார்த்த நடவடிக்கை 2019.06.30ம் திகதி பிரதேச செயலரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தற்போது மிதி படகில் சுற்றுலா செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஸ்கூட்டர் படகு மற்றும் பெரிய படகுகள் பாவனைக்கு விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
முதியோருக்கான மருத்துவ முகாம்
முதியோர் தேசிய செயலகத்தின் அனுசரணையுடன் வேலணை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய முதியோருக்கான மருத்துவ முகாம் நயினாதீவு அமுதசுரபி மண்டபத்தில் 2019.06.30ம் திகதி காலை 9.30 - 3.00 மணி வரை இடம்பெற்றது. இதில் வேலணை பிரதேச வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், யாழ் போதனா வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர், கிராம மட்ட உத்தியோகத்தர்கள்,சமூக சேவை பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். இம் மருத்துவ முகாமில் தொற்றா நோய்கள், கண் பரிசோதனை,பற்சிகிச்சை, குருதிப்பரிசோதனை தொடர்பான பரிசோதனைகளை 125 இற்கும் மேற்பட்ட முதியோர்கள் கலந்து கொண்டு பரிசோதித்து பயனடைந்தனர்.

























