செய்திகள்
News & Events
- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
அறநெறி மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு .
இந்து கலாசார திணைக்களத்தின் அறநெறி பாடசாலைகளுக்கு நடாத்தப்பட்ட திறன் விருத்தி போட்டிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் தலைமையில் 2019.04.24ம் திகதி சிறப்பாக நடைபெற்றது.

- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
அஞ்சலி செலுத்தும் நிகழ்வு
எமது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 2019.04.21ம் திகதியிலிருந்து இடம்பெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு பிரதேச செயலகம் வேலணையில் 2019.04.23ம் திகதி தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் உயிரிழந்த மக்களுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டு துக்கதினம் அனுஸ்டிக்கப்பட்டது.

- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
தமிழ் சிங்கள சித்திரை புதுவருட நிகழ்வு - 2019
2019ம் ஆண்டிற்கான தமிழ் சிங்கள சித்திரை புதுவருட நிகழ்வு வேலணை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலரின் தலைமையில் 2019.04.17ம் திகதி சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதேச செயலரால் உத்தியோகத்தர்களுக்கு கைவிசேடம் வழங்கப்பட்டதுடன் சித்திரை புதுவருட தினத்தை முன்னிட்டு வேலணை பிரதேச செயலக வளாகத்தில் மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றது.


- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
|
சமுர்த்தி சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா 2019ம் ஆண்டுக்கான சமுர்த்தி சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா வேலணை துறையூர் ஐயனார் சனசமூகநிலைய முன்றலில் 2019.04.21ம் திகதி காலை 8.30 மணிக்கு திருமதி. சுமலதா துஸ்யந்தன் (முகாமையாளர், சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி, வேலணை) தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு. இ.றமணன் (கணக்காளர், பிரதேச செயலகம் வேலணை) சிறப்பு விருந்தினர்களாக திருமதி. ஜெயகுமார் வசந்தி (தலைமையக முகாமையாளர், சமுர்த்தி,பிரதேச செயலகம் வேலணை), திரு.முத்துலிங்கம் சிவநேசன் (தலைவர், கட்டுப்பாட்டுச்சபை, சமுர்த்தி வங்கி, வேலணை) ஆகியோர் கலந்து கொண்டனர். பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று வீரர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டது.
|
- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
வர்த்தக கண்காட்சி - 2019
வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக வேலணை பிரதேச செயலகத்தில் 2019.04.10ம் திகதி நடைபெற்ற வர்த்தக கண்காட்சி நிகழ்வினை வேலணை பிரதேச செயலர் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இக் கண்காட்சியினை நூற்றுக்கணக்கான மக்களும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பார்வையிட்டு பயன்பெற்றதுடன் மெழுகுவர்த்தி உற்பத்திகள், உள்ளூர் உற்பத்தி உணவு பண்டங்கள், பனைஓலை சார் உற்பத்திகள் மற்றும் கடதாசி உற்பத்தி பொருட்கள் என்பன சுமார் 55000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டன.


























