செய்திகள்
News & Events
- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
பன்னிரு மாத விளக்கு வேலைத்திட்டத்தின் இவ் ஆண்டின் முதலாவது நிகழ்வாக வேலணை பிரதேச செயலகமும் தீவகம் தெற்கு கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய 2020ம் ஆண்டிற்கான பொங்கல் விழா 2020.02.08ம் திகதி காலை 7.30 மணிக்கு சரவணை செல்லக்கதிர்காமம் முருகன் ஆலயத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக மாவட்ட கலாசார அதிகார சபை இணைப்பாளர் திரு. இ. கிருஷ்ணகுமார் அவர்களும் சிறப்பு விருந்தினராக திருமதி இ.புவனேஸ்வரி அவர்களும் கௌரவ விருந்தினராக திரு. மருதன் கந்தையா அவர்களும் கலந்து கொண்டனர். கலாசார முறைப்படி விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மரநடுகையும் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று விழா இனிதே நிறைவடைந்தது.

- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கும் மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் மனைப்பொருளியல் டிப்ளோமா பாடநெறியினை மேற்கொண்ட 2019ம் ஆண்டு மாணவிகளின் கண்காட்சி அழைப்பிதழ்

- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
இலங்கையின் 72 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு "பாதுகாப்பான தேசம் வளமான நாடு" என்னும் தொனிப்பொருளில் 2020.02.04ம் திகதி காலை 8.00 மணிக்கு வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. பிரதேச செயலாளர் அவர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு ஆரம்பமான இந்நிகழ்வில் தேசியகீதம் இசைக்கப்பட்டதுடன் பிரதேச செயலாளரின் உரையும் சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வுகளைத் தொடர்ந்து பிரதேச செயலக வளாகம் மற்றும் எமது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பல்வேறு இடங்களில் மரநடுகை, சிரமதானம் இடம்பெற்றது.


மேலும் புகைப்படங்களை பார்வையிட
- விவரங்கள்
- எழுத்தாளர்: Velanai Admin
- பிரிவு: News & Events
எமது பிரதேச செயலகத்தின் நலன்புரி சங்கத்தால் ஒழுங்கமைப்பு செய்யப்பட்ட 2020ம் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா 2020.01.16ம் திகதி காலை 9.30 மணிக்கு பிரதேச செயலர் தலைமையில் ஆரம்பமானது. இவ் விழாவிற்கான வேலைகளை அனைத்து உத்தியோகத்தர்களும் சிறந்த முறையில் பங்கெடுத்து செய்தனர். பொங்கல் பூஜை சிறப்பாக நிறைவுற்ற பின்னர் எமது உத்தியோகத்தர்களால் தயார் செய்யப்பட்ட மதியபோசனம் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்பட்டு இவ் விழா இனிதே நிறைவடைந்தது.




























